ETV Bharat / state

தேனி மாணவருக்கு தமிழில் வாழ்த்து மடல் எழுதிய பிரதமர் மோடி! - பிரதமர் மோடியில் வாழ்த்து கடிதம்

Pariksha Pe Charcha : பரிக்‌ஷா பே சர்ச்சா 2023 என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று கட்டுரை எழுதிய தேனியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவனுக்கு தமிழில் வாழ்த்து கடிதம் எழுதி பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.

தேனி மாணவருக்கு தமிழில் வாழ்த்து மடல் எழுதி பாராட்டிய பிரதமர் மோடி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 8:46 PM IST

தேனி மாணவருக்கு தமிழில் வாழ்த்து மடல் எழுதி பாராட்டிய பிரதமர் மோடி

தேனி: பெரியகுளத்தை சேர்ந்த பொன்னம்பலம் - வனிதா தம்பதியினரின் மகன் அபிநவ் யஸ்வந்த் (வயது 15). இவர் தேவதானப்பட்டியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக சமீபத்தில் பிரதமரால் அறிவிக்கப்பட்ட"பரிக்‌ஷா பே சர்ச்சா 2023" என்ற நிகழ்ச்சியில் அபிநவ் யஸ்வந்த் பங்கேற்றார்.

அதில் அறிவிக்கப்பட்ட கட்டுரை போட்டியில் 'கடமைகளில் கவனம் செலுத்துதல்', என்ற தலைப்பில் தனது கட்டுரையை சமர்ப்பித்தார் அபிநவ். அந்த கட்டுரையை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி, மாணவனுக்கு தமிழில் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது, "உங்களை போன்ற இன்றைய தலைமுறை மாணவர்களின் ஆற்றல், தன்னம்பிக்கை, திறமைகளை பார்க்கும்போது மிகுந்த பெருமிதம் அடைகிறேன்.

வாழ்க்கையின் ஒவ்வொரு சோதனையிலும் நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். உங்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வாழ்த்து மடல் பெற்ற அபிநவ் கூறுகையில், "கடந்த ஆகஸ்ட் மாதம் பரிக்‌ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்றேன்.

இந்த நிகழ்ச்சியில் புத்திசாலித்தனம், காலம் தவறாமை, தன்னம்பிக்கை, தலைமைத்துவத் தரம் ஆகிய நான்கு குறித்து விரிவாக கட்டுரை வடிவில் சமர்பித்தேன். இதற்கு என்னை பாராட்டி பிரதமர் மோடி வாழ்த்து மடல் அனுப்பி உள்ளார். பிரதமரிடம் இருந்து வந்த கடிதம் எனக்கு சந்தோஷத்தை தருவதோடு எனது பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமையை தேடித் தந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதற்கு என் ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி" என்று கூறினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியிடம் வாழ்த்து கடிதம் பெற்ற அபிநவ் யஸ்வந்திற்கு பள்ளி ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "தமிழக மீனவர்கள் கைது.. உடனடி நடவடிக்கை காண்க" மத்திய வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.