அமமுக தேனி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பெரியகுளம் நகர் கழக செயலாளராக பன்னீர்செல்வம் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்துவந்தார். தற்போது அவரை பதவியிலிருந்து நீக்கி, மற்றொரு நபரை பெரியகுளம் நகர் கழக செயலாளராக தலைமைக் கழகம் நியமித்தது.
நகர செயலாளர் பதவியில் இருந்து பன்னீர்செல்வம் மாற்றப்பட்டதால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள் தாமாக பதவி விலக முன்வந்துள்ளனர். இது தொடர்பாக நேற்று பெரியகுளத்தில் அவசர கூட்டம் நடைபெற்றது. அதில் சார்பு அணி, பெரியகுளம் நகர் கழக வார்டு செயலாளர்கள் பன்னீர்செல்வம் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இக்கூட்டத்தில் பொறுப்புகளில் இருந்து மட்டும் விலகுவதாகவும் அமமுக உறுப்பினராக தொடருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அமமுக நிர்வாகிகள் பதவி விலகிருப்பது தேனி மாவட்ட அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:என்னை கைது செய்த அதிமுக அரசு, சென்னை வந்த அமித் ஷாவை ஏன் கைது செய்யவில்லை? உதயநிதி கேள்வி