ETV Bharat / state

"நமக்குப் பொது எதிரி திமுக தான்!"- தேனியில் கர்ஜித்த ஓ.பி.எஸ்! - ammk

தேனி : நமக்குப் பொது எதிரியான திமுகவை அனைவரும் ஒருங்கிணைந்து, 2021ஆம் ஆண்டு நடைபெற இருக்கிற சட்டமன்ற தேர்தலில் வீழ்த்தி எழுச்சியோடு வெற்றி பெறவேண்டும் என தேனியில் நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ops-sppech-in-theni-meeting
author img

By

Published : Aug 19, 2019, 10:50 PM IST

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிற கட்சியினர் 'அதிமுகவில் இணையும்' நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழா அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமமுக கட்சியிலிருந்த 5000-க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , 'இன்றைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். அண்ணன் தம்பிக்குள் மனஸ்தாபங்கள் ஏற்படுவது இயல்பு தான். அதுபோல பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமமுகவிலிருந்து மட்டுமல்லாமல் பல்வேறு கட்சிகளிலிருந்தும் ஏராளமானோர் வந்து அதிமுகவில் இணைகிறார்கள்.

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்

நமக்கு என்றுமே பொது எதிரி திமுக மட்டுமே. அனைவரும் ஒருங்கிணைந்து 2021ஆம் ஆண்டு நடைபெற இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்தி எழுச்சியோடு வெற்றி பெறவேண்டும்' என்று தெரிவித்தார்.

Intro: திமுக பொது எதிரி!!. அனைவரும் ஒருங்கிணைந்து எழுச்சியோடு 2021 சட்டமன்ற தேர்தலில் அதனை வெல்ல வேண்டும், என தேனியில் நடைபெற்ற தாய் கழக இணைப்பு விழாவில் ஓபிஎஸ் பேச்சு.

Body: தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவின் தாய் கழக இணையும் விழா இன்று நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஒன்றிய, பேரூர் மற்றும் நகரங்களில் உள்ள அமமுக கட்சியிலிருந்து 5358 நபர்கள் தங்களை
அதிமுகவில் மீண்டும் இணைத்துக் கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், இன்றைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். அண்ணன் தம்பிக்குள் சில மனஸ்தாபங்கள் ஏற்படும். ஆனால் இன்று அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நமது கட்சிக்கு அமமுக மட்டுமின்றி பல்வேறு கட்சிகளில் இருந்தும் ஏராளாமானோர் இணைந்து வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எதிரிகள், வேண்டாதவார்கள், எதிர்கட்சியினர் என அணைவருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து எல்லாராலும் அம்மா, அம்மா என்றழைக்கப்பட்டவர் என்று பேசினார். அவர் வழியில் மக்களுக்கான ஆட்சி தற்போது நடைபெறுவதால் அதிமுகவில் மீண்டும் இணைந்து வருகின்றனர்.
நமக்கு என்றுமே பொது எதிரி திமுக மட்டுமே,
அனைவரும் ஒருங்கிணைந்து எழுச்சியோடு வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் அதனை வெல்ல வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியின் வெற்றி இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று தேனியில் நடைபெற்ற இந்த விழாவும் அதேபோல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கட்சியில் மீண்டும் இணைந்தவர்களை எந்த ஒரு பாரபட்சம் பார்க்காமல் நமது உடன்பிறப்புகள் ஆகவே பாவிக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

Conclusion: இவ்விழாவில் அதிமுகவில் இணைந்த ஆண்கள், பெண்கள் அணைவருக்கும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் அதிமுக கரை வேஷ்டி மற்றும் சேலைகளை வழங்கினார்.

Ops Speech recorded through Live..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.