ETV Bharat / state

ஓட்டுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? - ஓபிஎஸ் தம்பி பேசிய வைரல் ஆடியோ!

தேனி: தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ. ராஜா, ஓட்டுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது என்ற தகவலை வெளியிட்ட ஆடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓட்டுக்கு பணம் எங்கிருந்து வருகிறது ரகசியத்தை உடைத்த ஓபிஎஸ் தம்பி!
author img

By

Published : Apr 27, 2019, 7:46 AM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில், மளிகைப் பொருட்களை அதிக விலைக்கு விற்பதாக தகவல் பரவியது. இதையடுத்து நுகர்வோர் அமைப்பின் தேனி மாவட்டத் தலைவர் ஜி.பி. துரை, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "நியாய விலைக்கடைகளில் மளிகைப் பொருட்கள் அதிக விலைக்கு விற்பது குறித்து நியாயவிலைக்கடை ஊழியர்களிடம் நேரில் கேட்டேன். இதைக் கேட்பதற்கு நீங்கள் யார் என்று நியாயவிலைக் கடை ஊழியர்கள் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அடுத்த சில மணி நேரத்தில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ. ராஜா என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.

அப்போது, நாங்கள் கட்சிக் கூட்டங்கள் நடத்தும்போது லட்சக் கணக்கில் பணம் செலவழிக்கிறோம். அதற்கு நியாயவிலைக் கடை ஊழியர்கள் பணம் கொடுக்கின்றனர். அப்படி நியாயவிலைக் கடைகளில் பணம் அதிகம் வாங்காவிட்டால் கட்சிக் கூட்டம் நடத்துவதற்கு நீ பணம் தருவாயா? நாங்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பது இவர்களிடம் வாங்கித்தான் என்று அவர் என்னிடம் கூறினார்" என்றார்.

இருவரும் தொலைபேசியில் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரகிறது.

  சுப.பழனிக்குமார் - தேனி.           26.04.2019.

பெரியகுளம் அருகே நியாய விலைக் கடைகளில் தனியார் மளிகை பொருட்களை அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு. தட்டிக் கேட்டவரை துணை முதல்வர் ஓபிஎஸ்-ன்; தம்பி .ராஜா, மறைமுக மிரட்டல் விடுவதாக வெளியான ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் தமிழக அரசு வழங்கும் இலவச அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்றால் கடுகு, சீரகம், வெந்தயம் உள்ளிட்ட மளிகை பொருட்களை கட்டாயம் வாங்க வேண்டும் என்பது, இங்குள்ள நியாய விலைக் கடைகளில் எழுதப்படாத சட்டமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுகிறது.

இந்நிலையில் பெரியகுளம் அருகே .புதுப்பட்டியில் உள்ள நியாய விலைக் கடைகளில் விற்கும் மளிகை பொருட்கள், தனியார் கடைகளில் விற்கப்படும் விலையை விட அதிக விலைக்கு விற்பதாக எழுந்த குற்றச்சாட்டை, நுகர்வோர் அமைப்பின் தேனி மாவட்ட தலைவர் ஜி.பி. துரை  என்பவர் தட்டிக்கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு நியாய விலைக்கடை ஊழியர்கள் நாங்கள் அப்படித்தான் விற்போம், இதைக் கேட்பதற்கு நீங்கள் யார் என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், நியாய விலைக்கடைகளில் அதிக விலைக்கு தனியார் மளிகை பொருட்கள் விற்பது குறித்து தான் தட்டி கேட்டதாகவும், இதனையடுத்து சில மணி நேரங்களில், தமிழக துணை முதல்வர் .பன்னீர்செல்வத்தின் தம்பி .ராஜா தன்னை தொலைபேசியில் அழைத்துப் பேசுகையில்,

நாங்கள் கட்சி கூட்டங்கள் நடத்தும் போது லட்சக் கணக்கில் பணம் செலவழிப்பதாகவும், அதற்கு நியாயவிலைக் கடை ஊழியர்கள் பணம் கொடுப்பதாகவும், அப்படி நியாயவிலை கடைகளில் பணம் அதிகம் வாங்கா விட்டால் கட்சி கூட்டம் நடத்துவதற்கு நீ பணம் தருவாயா? என்றும் நாங்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பது இவர்களைப் போன்றவர்களிடம் வாங்கித்தான் பணம் கொடுப்போம் என்றும், இந்த விஷயத்தில் நீ தலையிடாதே என்று மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு இது போன்று கிடைக்கின்ற பணத்தை தான் செலவழிப்பதாக .ராஜா ஒத்துக்கொள்வது மிகப்பெரிய ஜனநாயக தலைக்குணிவு என்றார்.

ஏற்கனவே கோவில் பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் .ராஜாவிற்கு தொடர்புள்ளது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது நியாய விலைக்கடைகளில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பது சம்பந்தமாக அவர்; அளித்துள்ள விளக்கம் குறித்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேட்டி: பீ.துரை (பெரியகுளம்)

Visuals, Audio,Byte & File shot sent FTP.

Slug Name As:

1)TN_TNI_03_26_O.RAAJA THREATEN AUDIO RATION SHOP ISSUE_SCRIPT_7204333                                     

2)TN_TNI_03a_26_O.RAAJA THREATEN AUDIO RATION SHOP ISSUE_AUDIO_7204333                               

3)TN_TNI_03b_26_O.RAAJA THREATEN AUDIO RATION SHOP ISSUE (FILE SHOT)_VIS_7204333                  

4)TN_TNI_03c_26_O.RAAJA THREATEN AUDIO RATION SHOP ISSUE_VIS_7204333                                     

5)TN_TNI_03d_26_O.RAAJA THREATEN AUDIO RATION SHOP ISSUE_BYTE_7204333

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

Description: images

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.