ETV Bharat / state

தேனியில் என்.ஐ.ஏ அலுவலர்கள் அதிரடி சோதனை - nia enquiry in theni

சின்னமனூரில் பிரியாணி கடை நடத்தி வருபவரின் வீட்டில் தேசிய புலனாய்வுத்துறை அலுவலர்கள் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

theni
தேனி
author img

By

Published : Jul 24, 2021, 9:49 PM IST

தேனி மாவட்டம் சின்னமனூர் வடக்கு ரத வீதியில், மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட யூசுப் அஸ்லாம் என்ற உதயகுமார் (31) பிரியாணி கடை நடத்தி வருகிறார். இந்து மதத்தைச் சேர்ந்த இவர் இஸ்லாமிய பெண் ஒருவரை காதலித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக மதம் மாறி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர் தனது மனைவியுடன் சின்னமனூர் பகுதியில் வசித்து வரும் நிலையில், அவரது வீட்டில் தேசிய புலனாய்வுத்துறை அலுவலர்கள் இன்று சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் தேசிய புலனாய்வு முகமை ஆய்வாளர் மைக்கேல் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அலுவலர்கள் ஈடுபட்டனர்.

சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான மதம் சார்ந்த கருத்துக்களைப் பதிவு செய்ததாகவும், பயங்கரவாதிகளோடு அவர்களுக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா எனவும் அலுவலர்கள் சோதனை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

இதனை அறிந்த இஸ்லாமிய மக்கள் அப்பகுதியில் ஒன்றுகூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

தேனியில் என்.ஐ.ஏ அலுவலர்கள் அதிரடி சோதனை

அவரது வீட்டில் உள்ள ஆதார் கார்டு, செல்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் கைப்பற்றி பரிசோதனை செய்தனர். இதுமட்டுமின்றி, யூசுப் அஸ்லாமை சின்னமனூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றும் விசாரணை நடத்தினர்.

சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அடுத்த விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராகுமாறு சின்னமனூர் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் எழுதி வாங்கிக் கொண்டு ஜமாத்தார்களிடம் யூசுப் அஸ்லாமை தேசிய புலனாய்வு அலுவலர்கள் ஒப்படைத்தனர்.

அதே போல, திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் முஸ்தபா என்பவரின் வீட்டிலும் தேசிய பாதுகாப்பு முகமை அலுவலர்கள் (என்ஐஏ) இன்று காலை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’பேரறிவாளன் வீட்டு பந்தல் வாடகையை எப்ப தருவீங்க?’ - பதறவைத்த பந்தல் அமைப்பாளர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.