ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்: ஜாமீன் மனுக்கள் நிராகரிப்பு!

தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மருத்துவ மாணவர்களின் தந்தையர் வெங்கடேஷ், முகம்மது சபி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் நிராகரிப்ப்பட்டுள்ளது.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்
author img

By

Published : Oct 9, 2019, 8:28 PM IST

Updated : Oct 9, 2019, 9:37 PM IST

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வருவதாக மாணவர் உதித் சூர்யா என்பவர் மீது புகார் எழுந்தது. கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அமைத்த விசாரணைக் கமிட்டியில் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மாணவர் உதித்சூர்யா தனது பெற்றோருடன் தலைமறைவாகினார். வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட நிலையில், தனிப்படை காவலர்கள் தலைமறைவாக இருந்த மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது பெற்றோர் வெங்கடேசன் - கயல்விழி ஆகியோரை திருப்பதியில் வைத்து கடந்த 25ஆம் தேதி கைது செய்தனர்.

பின்னர், தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து கடந்த 26ஆம் தேதி மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆள்மாறாட்டம் செய்ததை உதித் சூர்யா ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, தந்தை - மகன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் பன்னீர்செல்வம், உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்
இதனையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கும்படி உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிபதி வரும் அக்டோபர் 9ஆம் தேதி வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தார். உதித் சூர்யாவிடம் சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மேலும் சில மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. இடைத்தரகர் மூலம் ஆள்மாறாட்டம் நடைபெற்றதும் அம்பலமானது. இதில் சென்னை மாணவர்கள் பிரவின், ராகுல் மற்றும் அவர்களது தந்தையர் சரவணன், டேவிஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் அவர்களும் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியானது. இதனையடுத்து இவர்கள் நால்வரும் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே ஆள்மாறாட்ட குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து தலைமறைவான தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்ஃபான் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரது தந்தை டாக்டர். முகம்மது சபியிடம் தேனி சிபிசிஐடி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் ஒரு போலி மருத்துவர் எனத் தெரியவந்தது. மேலும் தனது மகன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வதற்கு உதவியதும் நிரூபணமானது. இதனைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 2ஆம் தேதி தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரும் தனக்கு ஜாமீன் வழங்கும்படி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த இருவரது ஜாமீன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. தேனி நீதித்துறை நீதிமன்றத்தில் நடுவர் பன்னீர்செல்வம் முன்னிலையில் வெங்கடேஷ் சார்பில் வழக்கறிஞர் விஜயகுமார் மற்றும் முகம்மது சபி சார்பில் வழக்கறிஞர் காஜாமைதீன் ஆகியோர் ஆஜராகினர். அதில் மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் அவர்களது உடல்நிலை கருதி ஜாமீன் வழங்குமாறு கேட்டுக் கொண்டனர். அதனை விசாரித்த நீதிபதி, வழக்கின் அத்தனை முக்கிய குற்றவாளிகளுக்கும் இதுவரை ஜாமீன் வழங்கப்படாத நிலையில் இவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவை நிராகரித்தார். இதனைத்தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பிரவின், ராகுல் மற்றும் அவர்களது தந்தையர் சரவணன், டேவிஸ் ஆகிய நால்வரது ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிக்கலாமே: நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு!

Intro: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கைது செய்யப்பட்ட மருத்துவ மாணவர்களின் தந்தையர் வெங்கடேஷ், முகம்மது சபியின் ஜாமின் மனு நிராகரிப்பு.

Body: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வருவதாக மாணவர் உதித் சூர்யா என்பவர் மீது புகார் எழுந்தது. கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அமைத்த விசாரணைக் கமிட்டியில் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது.இதனையடுத்து மாணவர் உதித்சூர்யா தனது பெற்றோருடன் தலைமறைவாகினார். வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் தனிப்படை காவலர்கள் தலைமறைவாக இருந்த மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது பெற்றோர் வெங்கடேசன் - கயல்விழி ஆகியோரை ஆந்திர மாநிலம் கீழ் திருப்பதியில் வைத்து கடந்த 25ஆம் தேதி கைது செய்தனர்.
பின்னர், தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து கடந்த 26ஆம் தேதி மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆள்மாறாட்டம் செய்ததை உதித் சூர்யா ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, தந்தை - மகன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.வழக்கை விசாரித்த தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் பன்னீர்செல்வம், உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனையடுத்து தனக்கு ஜாமின் வழங்கும்படி உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதனை விசாரித்த நீதிபதி வரும் அக்டோபர் 9ஆம் தேதி வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தார்.
உதித்சூர்யாவிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், மேலும் சில மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. இடைத்தரகர் மூலம் ஆள்மாறாட்டம் நடைபெற்றதும் அம்பலமானது. இதில் சென்னை மாணவர்கள் பிரவின், ராகுல் மற்றும் அவர்களது தந்தையர் சரவணன், டேவிஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் அவர்களும் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியானது. இதனையடுத்து இவர்கள் நால்வரும் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே ஆள்மாறாட்ட குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து தலைமறைவான தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்ஃபான் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரது தந்தை முகம்மது சபியிடம் தேனி சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஒரு போலி மருத்துவர் எனத் தெரியவந்தது. மேலும் தனது மகன் நீட் தேர்விற்கு ஆள்மாறாட்டம் செய்வதற்கு உதவியதும் நிரூபணமானது. இதனைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 2ஆம் தேதி தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரும் தனக்கு ஜாமின் வழங்கும்படி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இருவரது ஜாமின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
தேனி நீதித்துறை நீதிமன்றத்தில் நடுவர் பன்னீர்செல்வம் முன்னிலையில் வெங்கடேஷ் சார்பில் வழக்கறிஞர் விஜயகுமார் மற்றும் முகம்மது சபி சார்பில் வழக்கறிஞர் காஜாமைதீன் ஆகியோர் ஆஜராகினர். அதில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் அவர்களது உடல்நிலை கருதி ஜாமின் வழங்குமாறு கேட்டுக் கொண்டனர். அதனை விசாரித்த நீதிபதி, வழக்கின் அதனை முக்கிய குற்றவாளிகளுக்கு இதுவரை ஜாமின் வழங்கப்படாத நிலையில் இவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்து மனுவை நிராகரித்தார். Conclusion: இதனைத்தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பிரவின், ராகுல் மற்றும் அவர்களது தந்தையர் சரவணன், டேவிஸ் ஆகிய நால்வரது ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
Last Updated : Oct 9, 2019, 9:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.