நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த மாணவர் இர்ஃபான் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்வுக்குழுவினரும் சிபிசிஐடியும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரி இயக்ககத்தின் வழிகாட்டுதலின்படி, தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாச ராஜு செப்டம்பர் 30ஆம் தேதி, இர்ஃபானை மருத்துவக் கல்லூரியிலிருந்து நீக்கம் செய்து அதற்கான கடிதத்தைப் பதிவு அஞ்சலில் அனுப்பினார்.
இர்ஃபானின் தந்தை முகமது சபியிடம் தேனி சிபிசிஐடி விசாரணை நடத்தியதில், அவர் மூன்று ஆண்டுகள் மட்டும் மருத்துவப் படிப்பு படித்துவிட்டு முறையாக பட்டம் பெறாமல் வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் மருத்துவமனை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முகமது சபியை வரும் 16ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க, நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.
பின்னர் தலைமறைவாக இருந்து வந்த மாணவர் இர்ஃபான் கடந்த 1ஆம் தேதி சேலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவைர ஒன்பது நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் நீதிமன்ற காவலில் இருந்த இர்ஃபானின், தண்டனைக்காலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இர்ஃபானை காவல் துறையினர் இன்று ஆண்டிபட்டியில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனை விசாரித்த நீதிபதி மகேந்திர வர்மா தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உத்தரவிட்டார்.
இதையும் படியுங்க:
நீட் தேர்வு முறைகேடு: இர்ஃபான் தந்தை முகமது சபிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!