ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் சிக்குகிறார் தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ?

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் நடத்திய விசாரணையில் அவர் மீது சந்தேகம் இருப்பதாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

neet-exam-forgery-theni-medical-college-principle-inquiry
author img

By

Published : Sep 27, 2019, 8:31 PM IST

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தமிழ்நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியருந்தது. இது குறித்தான வழக்கை தற்போது சிபிசிஐடி காவலர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து, கைது செய்யப்பட்ட மாணவன் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனிடம் சிபிசிஐடி காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, தேனி மருத்தவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனை விசாரணைக்காக அழைத்துவந்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. குறிப்பாக நீட் கலந்தாய்வு முடிந்து, தேனி மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் போடவந்தது உதித் சூர்யாதானா? இல்லை அவருக்கு பதில் தேர்வு எழுதியவரா ? என்று கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

அதற்கு, கல்லூரிக்கு வந்து அட்மிஷன் போடவந்தது போலியான நபர்தான் என்று பதிலளித்துள்ளார். இந்த விஷயத்தை இவர் முன்னதாக ஊடகங்களிலும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது கல்லூரி சேர்க்கை நடைபெற்ற நேரத்தில் கொடுக்கப்பட்ட பயோடேட்டாவில் உதித் சூர்யாவின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கும் ஆவணம் வெளியாகியுள்ளது.

neet-exam-forgery-theni-medical-college-principle-inquiry
சேர்க்கையின் போது கொடுக்கப்பட்ட தன்உதித் சூர்யாவின் சுயவிபரக்குறிப்பு

கல்லூரி முதல்வர் வாக்குமூலத்தின்படி,கல்லூரி சேர்க்கைக்கு வந்தது உதித் சூர்யா இல்லை என்றால் அதில் ஒட்டப்பட்டுள்ள புகைப்படத்தை ஒப்பிட்டு பார்க்காமல், கல்லூரி நிர்வாகம் அட்மிஷன் போட்டதா ? என்ற கேள்வி எழுகிறது.

இது தொடர்பாக சிபிசிஐடி., வட்டாரத்தில் விசாரித்ததில், கல்லூரி முதல்வர் மீது எங்களுக்கு நிறையே சந்தேகங்கள் உள்ளன. முதற்கட்டமாக தனிப்படை காவல் துறையினர் அவரிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை செய்திருக்கிறார்கள். அப்போது, அவர் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியுள்ளார்.எனவே நாங்கள் அவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்த இருக்கிறோம் என்றனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்: உதித்சூர்யா, தந்தை வெங்கடேஷ் இருவருக்கும் நீதிமன்ற காவல்!

Intro: பயோடேட்டாவில் உதித்சூர்யாவின் உண்மையான படம்.
நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சிக்குகிறாரா?
Body: நீட் ஆள்மாறாட்ட வழக்கை தேனி சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரமாக விசாரித்துவரும் சூழலில், உதித்சூர்யா தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்கையான போது நடந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக முக்கிய ஆவணம் ஒன்று வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனை, நேற்று தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்துகொண்டிருக்கும் போது, மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனை விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி போலீஸார் அழைத்தனர். அவரும், தேனி சமதர்மபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேக்கப்பட்டன. குறிப்பாக, நீட் கலந்தாய்வு முடிந்து, தேனி மருத்துவக் கல்லூரிக்கு வந்தது உண்மையான உதித் சூர்யா தானா? அல்லது நீட் தேர்வு எழுதிய அந்த போலியான நபரா? என கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. அதற்கு, ‘கல்லூரிக்கு வந்து அட்மிஷன் போட்டது போலியான நபர் தான்.!’ என முதல்வர் ராஜேந்திரன் பதில் கொடுத்துள்ளார். அதையே ஊடகங்களுக்கும் முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது, கல்லூரி சேர்கை நடைபெற்ற நேரத்தில், மாணவர்களின் பயோடேட்டாவை கேட்டிருக்கிறது கல்லூரி நிர்வாகம். அதன்படி உதித்சூர்யாவின் உண்மையான படம் அதில் ஒட்டப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர் ராஜேந்திரனின் வாக்குமூலத்தின் படி, கல்லூரி சேர்க்கைக்கு வந்தது போலியான உதித்சூர்யா என்றால், பயோடேட்டாவில் ஒட்டப்பட்டுள்ள படத்தை ஒப்பிட்டுப் பார்க்காமல், கல்லூரி நிர்வாகம் அட்மிஷன் போட்டதா என்ற கேள்வி எழுகிறது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி
வட்டாரத்தில் விசாரித்ததில், கல்லூரி முதல்வர்மீது எங்களுக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன. முதல்கட்டமாக தனிப்படை போலீசார் அவரிடம் 2மணி நேரத்திற்கு மேலாக விசாரணை செய்திருக்கிறார்கள். அப்போது அவர் பல கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியாமல் திணறியுள்ளார். எனவே, நாங்கள் அவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்த இருக்கிறோம்” என்றனர்.

Conclusion: நாட்கள் செல்லச் செல்ல மர்ம முடிச்சுகள் பல விழுந்துகொண்டே செல்கிறது. அதனை ஒவ்வொன்றாக அவிழ்க்குமா சி.பி.சி.ஐ.டி? பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.