திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கே.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் குனசேகரன் (40). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி சூரியகுமாரிக்கும்(36) கடந்த 2015ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் தொடர்ந்து திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியதையடுத்து மும்பைக்கு தன்னுடன் வருமாறு சூரியகுமாரியை குனசேகரன் வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு சூரியகுமாரி வர மறுத்ததால் ஆத்திரமடைந்த குனசேகரன் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சூரியகுமாரியின் உறவினர் ஜீவா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஆண்டிபட்டி காவல் துறையினர் குனசேகரனை கைது செய்து நீதிமன்றக் காவலில் உட்படுத்தினர்.
இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்து நிலையில், இன்று தேனி மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெண்னை கொலை செய்த குணசேகரனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து குணசேகரனை மத்திய சிறையில் அடைப்பதற்காக தகுந்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவர் கைது!