ETV Bharat / state

கேரளாவில் மழை; முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு - முல்லைப்பெரியாறு அணை

தேனி: கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்துவருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியை எட்டியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்
author img

By

Published : Aug 13, 2019, 9:57 AM IST

கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. இது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது. கோடைக் காலங்களில் போதியளவு மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது.

இந்நிலையில் ஜூனில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழையும் எதிர்பார்த்த அளவு பெய்யாததால் அணையின் நீர்வரத்து குறைந்தே காணப்பட்டது. இதனால், நீர்வரத்து கம்பம் பள்ளத்தாக்கில் முதல்போக சாகுபடி செய்ய விவசாயிகள் தயங்கினர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகக் கேரளாவில் வெளுத்து வாங்கிய தென்மேற்குப் பருவமழையினால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன்மூலம் மூன்று நாட்களில் மட்டும் 15 அடிவரை நீர்மட்டம் உயர்ந்தது. மேலும், இன்று காலை ஆறு மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 130 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீரைத் தேக்குவதற்கு அனுமதிக்கப்பட்டளவு 142 அடியாகும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்

அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,404 கனஅடியாக உள்ளதால், தமிழ்நாட்டிற்கு 1700 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையொட்டி, முதல்போக சாகுபடிக்கு காலம் கடந்துவிட்டதால் அடுத்த போகத்திற்காவது உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Intro:         தொடர்மழையினால் 130அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை. முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள்.
Body:         கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழ்கிறது. கோடையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதியளவு மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது. மேலும் ஜூனில் துவங்கிய தென் மேற்குப்பருவமழையும் எதிர்பார்த்த அளவு கிடைக்காததால் அணையின் நீர்வரத்து குறைந்தே காணப்பட்டன. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயராததால் கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டத்தயங்கினர்.
         இந்நிலையில் கடந்த சில தினங்களாக கேரளாவில் வெளுத்து வாங்கிய தென்மேற்குப் பருவமழையினால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் 3தினங்களில் மட்டும் 15அடி அரை உயரத் தொடங்கியது. இன்று காலை 6மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 130அடியாக உயர்ந்துள்ளது. மொத்த நீர்தேக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட அளவு 142அடியாகும். அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2404கன அடியாக உள்ள நிலையில், தமிழகத்திற்கு 1700கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 4697மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
         தொடர்மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்;மட்டம் உயர்ந்து வருவதையொட்டி பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே முதல் போக சாகுபடிக்கு காலம் கடந்து விட்டதால் ஒரு போகத்திற்காவது உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காத்திருக்கின்றனர்.
Conclusion: மேலும் இதே போல் தொடர்ந்து மழை பெய்து அணையின் நீர்மட்டம் விரைவில் 142அடியை எட்டிட வேண்டும் என்கிற ஆவலில் தேனி மாவட்ட பொதுமக்கள் உள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.