கேரள மாநிலம் தேக்கடியில் முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் நீராதாரமாக இது திகழ்கிறது.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றமானது மூவர் குழு ஒன்றை நியமித்தது. இக்குழுவிற்கு உதவியாக ஐந்து பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது. அக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தற்போது உள்ளார்.
தமிழ்நாடு பிரதிநிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் சாம் இர்வின், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் அருண் கே.ஜேக்கப், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர்.
இக்குழுவினர், அணைப்பகுதிக்குச் செல்ல தேக்கடியில் உள்ள படகுத்துறை வழியாக சென்றனர்.
இந்த குழு பெரியாறு மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, மதகுப்பகுதி, மழையின் அளவு, அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், சீப்பேஜ் வாட்டர் (கசிவுநீர்) குறித்து ஆய்வு மேற்கொள்ளுகின்றனர்.
இதனைத்தொடர்ந்து மாலை குமுளியிலுள்ள பெரியாறு அணை கண்காணிப்பு குழுவின் அலுவலகத்தில் துணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், ஆய்வுகள் குறித்து அறிக்கையாக தயார் செய்யப்பட்டு மூவர் குழுவிடம் சமர்ப்பிக்கப்படஉள்ளது.
இதையும் படிங்க: மாற்றான் மனைவி மீது மோகம் கொண்ட இளைஞருக்கு ரூ.5 கோடி அபராதம்