தேனி: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக வடிவேலு ( வயது 43) பணியாற்றி வந்தார். கடந்த 23ஆம் தேதி பணி முடித்துவிட்டு சின்னமனூரில் உள்ள வீட்டிற்கு செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். பின், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி கடந்த 24 ஆம் தேதி மூளைச்சாவு அடைந்து வடிவேலு உயிரிழந்தார். உயிரிழந்த வடிவேலுவின் உடல் உறுப்புகளை குடும்பத்தார் தானம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, சின்னமனூர் அருகே உள்ள காந்தி காலனியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த வடிவேலுவின் உடலுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், வடிவேலுவின் உடல் உறுப்புகள் தானம் செய்வதற்கு குடும்பத்தார்கள் சம்மதம் தெரிவித்தன் பேரில், அவரது உடலில் சிறுநீரகம், கல்லீரல், கண் விழி, தோல் உள்ளிட்டவற்றை தானமாக வழங்கப்பட்டன. தானமாக வழங்கப்பட்ட உடல் உறுப்புகள் மதுரை அப்பல்லோ மருத்துவமனை மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடல் உறுப்புகள் வேண்டி காத்திருக்கும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளன எனத் தெரிவித்தார்.
-
உடல் உறுப்பு கொடையாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் எனும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க தேனி-சின்னமனூரை சார்ந்த வடிவேல் அவர்களின் திருவுடலுக்கு மாவட்ட ஆட்சி நிர்வாகத்துடன் இணைந்து அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது .. @mkstalin… pic.twitter.com/92ofVnr68F
— Subramanian.Ma (@Subramanian_ma) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">உடல் உறுப்பு கொடையாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் எனும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க தேனி-சின்னமனூரை சார்ந்த வடிவேல் அவர்களின் திருவுடலுக்கு மாவட்ட ஆட்சி நிர்வாகத்துடன் இணைந்து அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது .. @mkstalin… pic.twitter.com/92ofVnr68F
— Subramanian.Ma (@Subramanian_ma) September 26, 2023உடல் உறுப்பு கொடையாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் எனும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க தேனி-சின்னமனூரை சார்ந்த வடிவேல் அவர்களின் திருவுடலுக்கு மாவட்ட ஆட்சி நிர்வாகத்துடன் இணைந்து அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது .. @mkstalin… pic.twitter.com/92ofVnr68F
— Subramanian.Ma (@Subramanian_ma) September 26, 2023
உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள் கொடையாக வழங்கப்படுபவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்படும் என்று தெரிவித்த அமைச்சர், உயிரிழந்த வடிவேலுவின் தந்தை கடந்த 25 ஆண்டுகளாக கண் பார்வை இழந்து தவித்து வரும் நிலையில் அவரை சென்னை கண் மண்டல மருத்துவமனை மூலம் பரிசோதனை செய்து கண் பார்வை மீண்டும் கிடைக்க வாய்ப்பு இருந்தால் அவருக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், வடிவேலுவின் உடலுக்கு மதுரை மண்டல அப்பல்லோ மருத்துவமனை முதன்மைச் செயலாளர் நீலகண்டன் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது, "வடிவேலுவின் உயிரிழப்புக்கு மருத்துவமனை சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தந்தோம். உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்த வடிவேலுவின் குடும்பத்தாருக்கு மருத்துவமனை சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற அறிவிப்புகளால் உடல் உறுப்புத் தானம் இன்னும் வரும் காலங்களில் அதிகரிக்கக் கூடும்" என்றார்.
இதையும் படிங்க:பூட்டிய வீட்டில் மர்மமான முறையில் சடலமாக கிடந்த காவலாளி - நடந்தது என்ன?