தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கோம்பையைச் சேர்ந்தவர் கணேசன் (61). அதிமுக கோம்பை பேரூர் கழக பொருளாளராக பதவி வகிக்கும் இவர், தனது வீட்டருகே வசிக்கும் இரண்டரை வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து ஏமாற்றி, பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.
சிறுமியின் உடல்நலம் பாதிக்கவே, சிறுமியின் பெற்றோர் இதுதொடர்பாக போடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அதிமுக பிரமுகர் கணேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இரண்டரை வயது சிறுமியை அதிமுக பிரமுகர் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:விழுப்புரத்தில் சாராயம் காய்ச்சிய மூவர் கைது!