தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணைக்கு நாள்தோறும் ஏராளமானச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், அணையின் வலதுகரை பிரிவில் உள்ள பழைய சிமெண்ட் குடோனில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதாக அணையின் பாசன உதவியாளர் பால்பாண்டி இளம்பொறியாளர் குபேந்திரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பொறியாளர் குபேந்திரன் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இறந்தவர் சுமார் 50 முதல் 55 வயதிருக்கலாம் எனவும், கழுத்தில் கயிறு கட்டி தூக்கில் தொங்கியவாறு உடல் அழுகிய நிலையில் காணப்படுவதால் இறந்து ஒரு மாதம் இருக்கக்கூடும் என்றும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வைகை அணை காவல்துறையினர் இறந்தவர் விபரம், இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அடிக்கடி குழந்தைக்கு உடல்நலக்குறைவு: தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை!