தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கல் முன்பாக பள்ளி கல்லூரி அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சியை விமரிசையாக பலர் கொண்டாடி வரும் நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தேனி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த சமத்துவப் பொங்கல் விழாவில், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி சீனிவாசன், மகளிர் நீதிமன்ற நீதிபதி கீதா, நீதிபதிகள் வெங்கடேசன், மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரது முன்னிலையில் வழக்கறிஞர்கள் பொங்கல் வைத்தனர். ஜல்லிக்கட்டு காளைகளை முன்னிறுத்தி தமிழர் மரபுப்படி செங்கரும்பு தோரணம் கட்டி பொங்கல் வைத்து வழக்கறிஞர்கள் சமத்துவப் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த சமத்துவப் பொங்கல் விழாவில் தேனி மாவட்ட நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உள்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: காஷ்மீர், ஈரான் விவகாரம் குறித்து பிரான்ஸ் அதிபருடன் விரிவாகப் பேசிய மோடி