ETV Bharat / state

நிலமோசடியில் உச்சம்.! இறந்தவர் பத்திரப்பதிவு செய்து கொடுத்த அதிசயம்!

author img

By

Published : Nov 29, 2019, 7:31 AM IST

தேனி: ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர் மீண்டு வந்து அவருடைய நிலத்தை மற்றொரு நபருக்கு விற்ற விநோத மோசடி சம்பவம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அரங்கேறியுள்ளது.

land cheating issue in theni  தேனி நிலமோசடி வழக்கு  தேனி நிலமோசடி
தேனி நிலமோசடி

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி அருகிலுள்ள துரைராஜாபுரத்தைச் சேர்ந்தவர்கள் பழனிசாமி - ராமுத்தாய் தம்பதியினர். இவர்களுக்கு 5 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த பழனிசாமிக்கு நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு நிலம் வழங்கும் திட்டத்தின் மூலம், தமிழ்நாடு அரசு சார்பாக 1977ஆம் ஆண்டு பூதிப்புரம் பகுதி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மூன்று ஏக்கர் விவசாய நிலம் வழங்கப்பட்டது.

கூலி வேலை செய்து வந்த பழனிசாமி 2010ஆம் ஆண்டு வயது முதிர்ச்சி காரணமாக மரணமடைந்தார். தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அவரது பெயரில் உள்ள நிலத்தைப் பட்டா பெயர் மாற்றுதல் தொடர்பான வில்லங்க சான்றிதழ் வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதுதான் பழனிசாமி குடும்பத்தாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஜெயம் மருத்துவமனை செய்த காரியம்... இருமலுக்கு ஊசி போட்ட மருத்துவர்! எப்படி நிகழ்ந்தது மரணம்?

பழனிசாமிக்குச் சொந்தமான இடம் தேனி ஓடைத் தெருவைச் சேர்ந்த நிலத் தரகர் மலைச்சாமி என்பவர் பெயரிலிருந்தது. அதனைத் தொடர்ந்து பழனிசாமி குடும்பத்தினர் பத்திரப்பதிவு செய்யப்பட்ட பத்திரங்களைப் பார்த்த போது மேலும் அதிர்ச்சியடைந்தனர்.
2010ஆம் ஆண்டு இறந்து போன பழனிசாமி, 2017ஆம் ஆண்டு மலைச்சாமிக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக ஆவணங்கள் இருந்துள்ளன.

மேலும் பதிவு செய்யப்பட்ட பாத்திரத்தில் பழனிசாமியின் வாக்காளர் அடையாள அட்டை இடம்பெற்றிருந்தது. ஆனால் பழனிசாமி புகைப்படத்திற்கு மாற்றாக வேறு ஒருவர் புகைப்படத்தை வைத்து போலியான வாக்காளர் அடையாள அட்டையை தயாரித்து அதைப் பத்திரப் பதிவு செய்தது தெரியவந்துள்ளது.

கற்பழித்த பெண்ணை வீட்டில் விடுவதில் தகராறு - இளைஞர் அடித்துக்கொலை

போலி வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள வாக்காளர் அடையாள எண்ணை வைத்துச் சோதித்ததில் நில தரகர் மலைச்சாமியின் மனைவி லோகேஸ்வரி பெயரில் இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து பழனிசாமியின் மகன் சுகுமார், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 8ஆம் தேதி புகாரளித்துள்ளார்.

அந்த புகார் அளிக்கப்பட்ட ஐந்து நாட்களிலேயே இறந்துபோன பழனிசாமி 2017ஆம் ஆண்டு பதிவு செய்த பத்திரத்தை ரத்து செய்ததாகப் பத்திரப்பதிவு அலுவலகத்தின் ஆவணங்களிலிருந்து கிடைத்த தகவலால் பழனிச்சாமியின் குடும்பத்தினர் பேரதிர்ச்சி அடைந்தனர். இறந்த நபர் பெயரில் உள்ள நிலத்தைப் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து தனது பெயருக்கு மாற்றியதோடு மட்டுமல்லாமல் புகார் எழுந்தவுடன் அந்தப் பத்திரத்தை ரத்து செய்தது அம்பலமானது.

உரிய ஆவணங்களுடன் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து மூன்று மாதங்களாகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் மேலும் வேதனையான விஷயம். பத்திரப் பதிவு நடைபெறும்போது போலி வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தியதைக் கண்டுபிடிக்காமல், இறந்தார் பெயரில் உள்ள நிலத்தைப் பத்திரப்பதிவு செய்து கொடுத்தது மட்டுமல்லாமல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரத்து செய்துள்ளனர்.

நிலமோசடியில் உச்சம்.! இறந்தவர் பத்திரப்பதிவு செய்து கொடுத்த அதிசயம்!

இந்த விவகாரத்தில் சார்பதிவாளர் எதன் அடிப்படையில், பதிவு செய்தார் என்பது குறித்த பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

Intro: நிலமோசடியில் உச்சம்.! இறந்தவர் பத்திரப்பதிவு செய்து கொடுத்த அதிசயம்!!
மோசடி புகாரில் பத்திரப்பதிவு அலுவலகம்!!
9ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர் மீண்டு வந்து அவருடைய நிலத்தை மற்றொரு நபருக்கு விற்ற வினோதம்! பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த மோசடி..

Body: தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி அருகிலுள்ள துரைராஜாபுரத்தை சேர்ந்தவர்கள் பழனிச்சாமி - ராமுத்தாய் தம்பதியினர். இவர்களுக்கு 5மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். ஆதி திராவிடர் இனத்தை சேர்ந்த பழனிச்சாமிக்கு நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு நிலம் வழங்கும் திட்டத்தின் மூலம் தமிழக அரசு சார்பாக 1977ம் ஆண்டு பூதிப்புரம் பகுதி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் 3 ஏக்கர் விவசாய நிலம் வழங்கப்பட்டது.
கூலி வேலை செய்து வந்த பழனிச்சாமி கடந்த 2010 ஆம் ஆண்டு வயது முதிர்ச்சி காரணமாக மரணமடைந்தார். தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அவரது பெயரில் உள்ள நிலத்தை பட்டா பெயர் மாற்றுதல் தொடர்பான வில்லங்க சான்றிதழ் வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போது தான் பழனிச்சாமி குடும்பத்தாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பழனிச்சாமிக்கு சொந்தமான இடம் தேனி ஓடைத் தெருவை சேர்ந்த நில புரோக்கர் மலைச்சாமி என்பவர் பெயரில் இருந்தது. அதனைத் தொடர்ந்து பழனிச்சாமி குடும்பத்தினர் பத்திரப்பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை பார்த்த போது தான் கூடுதல் அதிர்ச்சியடைந்தனர்.
2010ஆம் ஆண்டு இறந்து போன பழனிச்சாமி 2017 ஆம் ஆண்டு மலைச்சாமிக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக ஆவனங்கள் இருந்தது. மேலும் பதிவு செய்யப்பட்ட பாத்திரத்தில் பழனிச்சாமியின் வாக்காளர் அடையாள அட்டை இடம்பெற்றிருந்தது. ஆனால் பழனிச்சாமி புகைப்படத்திற்கு மாற்றாக வேறு ஒருவர் புகைப்படத்தை வைத்து போலியான வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து அதை பத்திரப் பதிவு செய்தது தெரியவந்துள்ளது. போலி வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள வாக்காளர் அடையாள எண்ணை வைத்து சோதித்ததில் நில புரோக்கர் மலைசாமியின் மனைவி லோகேஸ்வரி பெயரில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பழனிச்சாமியின் மகன் சுகுமார், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி புகார் அளித்துள்ளார். அந்த புகார் அளிக்கப்பட்ட 5 நாட்களிலேயே இறந்து போன பழனிச்சாமி 2017 ஆம் ஆண்டு பதிவு செய்த பத்திரத்தை ரத்து செய்ததாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆவணங்களிலிருந்து தான் கூடுதல் அதிர்ச்சி.!!
இறந்த நபர் பெயரில் உள்ள நிலத்தை போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து தனது பெயருக்கு மாற்றியதோடு மட்டுமல்லாமல் புகார் எழுந்தவுடன் அந்தப் பத்திரத்தை ரத்து செய்தது அம்பலமாகி உள்ளது. உரிய ஆவணங்களுடன் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து மூன்று மாதங்களாகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

Conclusion: பத்திரப் பதிவு நடைபெறும் போது போலி வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தியதைக் கண்டுபிடிக்காமல், இறந்தார் பெயரில் உள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்தது மட்டுமல்லாமல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரத்து செய்துள்ளனர். சார்பதிவாளர் எதன் அடிப்படையில், பதிவு செய்தார்! என்பது குறித்த பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

பேட்டி : சுகுமார் (இறந்த பழனிச்சாமியின் மகன்)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.