ETV Bharat / state

குடித்துவிட்டு தொல்லை செய்தவர் அடித்துக் கொலை : நாடகமாடிய மனைவி, மகன் கைது - Police arrested Munyanti s wife and son

ஆண்டிபட்டி அருகே குடிபோதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்த வந்த கூலித்தொழிலாளியை அடித்து கொலை செய்ததாக மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

தேனி அருகே தொழிலாளி அடித்துக் கொலை: மனைவி, மகன் கைது

author img

By

Published : Dec 1, 2022, 4:44 PM IST

தேனி: ஆண்டிபட்டி தாலுகா கண்டமனூர் அருகே உள்ள ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் 55 வயதான முனியாண்டி கூலித்தொழிலாளி ஆவார். இவருக்கு மனைவி, மகள் முருகேஸ்வரி மற்றும் பூங்கொடி, ஜோதிலட்சுமி என்ற 2 மகள்களும் காளிதாஸ் என்ற மகனும் உள்ளனர்.

காளிதாஸ் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மகள்கள் இருவரும் திருமணம் முடிந்து வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக காளிதாஸ் ஜி.உசிலம்பட்டிக்கு வந்திருந்தார்.

மது போதைக்கு அடிமையான முனியாண்டி மனைவியுடன் அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் முனியாண்டி மது குடித்துவிட்டு போதையில் மனைவி முருகேஸ்வரி, மகன் காளிதாஸ் இருவரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதனையடுத்து காளிதாசை கன்னத்தில் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ் முனியாண்டியை தாக்கி கீழே தள்ளியுள்ளார். கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த முனியாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த முருகேஸ்வரி, காளிதாஸ் இருவரும் கொலையை மறைக்க முடிவு செய்தனர்.

அதன்படி தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாத போது முனியாண்டி சடலத்தை அவர்கள் வீட்டின் முன்பாக வைத்துவிட்டு முனியாண்டி மதுபோதையில் கீழே விழுந்து விட்டதுபோல் கத்தி கூச்சலிட்டுள்ளனர். பின்பு தகவலறிந்த கண்டமனூர் போலீசார் ஜி.உசிலம்பட்டிக்கு சென்று முனியாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முனியாண்டிக்கு கொலை செய்யும் அளவில் எதிரிகள் யாரும் இல்லாததால் அவரது மனைவி மற்றும் மகன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும் கண்டமனூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் கிடுக்கு பிடி விசாரணையில் முனியாண்டியை கொலை செய்து நாடகமாடியதை இருவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:தங்கையை பெண்கேட்டு தகராறு.. அண்ணனை வெட்டிக் கொன்ற இளைஞர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.