தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உ. அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (29). இவர் ஜே.சி.பி ஓட்டுநரான இவருக்கு ரம்யா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் அம்மாபட்டி சாலையில் உள்ள நாடார் பங்களா பகுதியில் ராஜேஷ் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ராஜேஷை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் வழியிலேயே பரிதபாமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த உத்தமபாளையம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டதில் அதேப் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (23), பொம்மையன் (22) ஆகிய இருவரும் இணைந்து ராஜேஷை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ராஜேஷின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் வந்த காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:
தொடரும் சாதிய வன்கொடுமை: தாழ்த்தப்பட்ட நபர் சிறுநீர் குடிக்கவைத்துக் கொடூரக் கொலை!