ETV Bharat / state

கைச்சலவை பட்டறைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

தேனி: சக்கம்பட்டியிலுள்ள கைச்சலவை பட்டறைத் தொழில் குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பொய் புகார் அளித்து வரும் தனிநபர்களின் செயலை கண்டித்து சலவைப்பட்டறைத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Jakkampatti bleaching labours infinite strike
கைச்சலவை பட்டறைத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
author img

By

Published : Sep 30, 2020, 9:30 AM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் சுமார் 500க்கும் மேற்பட்ட சிறு விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காட்டன் சேலை, சுங்குடி சேலை, கோடம்பாக்கம் சேலை மற்றும் காவி, கருப்பு, வெள்ளை நிற வேஷ்டிகள் உற்பத்தி நடைபெறுகின்றன.

விசைத்தறி இயக்குதல், பசைபோடுதல், பன்னேற்றம், பாவு கட்டுதல், சலவை மற்றும் சாயப்பட்டறை என நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக நூல் விலை உயர்வு, சம்பள பிரச்னை மற்றும் கரோனா ஊரடங்கு காரணமாக நெசவுத்தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனவே ஈரோடு போன்ற வெளிமாவட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்ட வேஷ்டி ரகங்களை வாங்கி சலவை செய்து சந்தைப்படுத்தி வருகின்றனர்.

இதையடுத்து கைச்சலவை பட்டறைத் தொழில் குறித்து சில தனிநபர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பொய் புகார் தெரிவித்து, தொழிலை முடக்குவதாகக் கூறி சக்கம்பட்டி சலவைப் பட்டறைத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Jakkampatti bleaching labours infinite strike
கைச்சலவை பட்டறைத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

பொய் புகார் கொடுத்து சலவைப் பட்டறை தொழிலை முடக்கச் செய்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை பாதிக்கச் செய்யும் நபர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கைச்சலவை பட்டறைத் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தில், சக்கம்பட்டி சிறு கைச்சலவை பட்டறைத் தொழிலாளர்கள், சலவைப் பட்டறைத் தொழிலாளர்கள் மற்றும் அயர்னிங் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்

தீபாவளிப் பண்டிகை நெருங்க உள்ள சூழலில் சக்கம்பட்டி கைச்சலவை பட்டறைத் தொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பல கோடி ரூபாய் ஜவுளி உற்பத்தி பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசு அழைப்பிதழில் பன்னீர் பெயர் மிஸ்ஸிங்: கழற்றிவிடுகிறாரா இபிஎஸ்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.