ETV Bharat / state

முல்லைபெரியாறு அணையில் ஐவர் கொண்ட துணை கண்காணிப்புக்குழு ஆய்வு - inspection in mullaperiyar dam

தேனி முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆதார துணைக் குழுவினர் ஆய்வு நடத்துகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையில் இன்று ஆய்வு
முல்லைப் பெரியாறு அணையில் இன்று ஆய்வு
author img

By

Published : Feb 1, 2023, 4:17 PM IST

முல்லைபெரியாறு அணையில் ஐவர் கொண்ட துணை கண்காணிப்புக் குழு ஆய்வு

தேனி: முல்லைப்பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்ச நீதி மன்றம் கண்காணிப்புக் குழுவை அமைத்தனர். தற்போது இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்சன் ராஜ் உள்ளார்.

இந்த மூவர் குழுவினருக்கு உதவியாக துணை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக தற்போது கொச்சியிலுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் புதிதாக பொறுப்பேற்றுள்ளார். தமிழ்நாடு பிரதிநிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கட்டப்பனை நீர்ப்பாசன செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் இன்று(பிப்.01) துணைக்குழுவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையிலான துணைக்குழுவினர் இன்று பெரியாறு அணையின் நீர்மட்டம் 127.75 அடியாக உள்ள நிலையில், பெரியாறு அணையில் செய்யப்பட்டு வரும் வழக்கப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்கு அணைப் பகுதிக்கு சென்றுள்ளனர்.

முன்னதாக, கேரள மாநிலம், குமுளி அருகே உள்ள தேக்கடி படகு துறையிலிருந்து துணை கண்காணிப்பு குழுவின் தலைவர் மற்றும் தமிழ்நாடு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் தமிழ்நாட்டிற்கு சொந்தமான கண்ணகி படகின் மூலம் அணை பகுதிக்குச்சென்றனர். கேரள அதிகாரிகள் கேரளாவிற்குச் சொந்தமான படகில் அணை பகுதிக்கு கிளம்பிச் சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் முல்லைப்பெரியாறு அணையின் மெயின் அணை, பேபிஅணை, கேலரிப்பகுதி, அணையின் கசிவுநீர் குறித்து ஆய்வு செய்கின்றனர்.

இந்த ஆய்விற்குப் பின்பாக துணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் குமுளியிலுள்ள கண்காணிப்புக் குழுவின் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து கூட்டத்தின் முடிவுகள் கண்காணிப்பு குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க:என்எல்சிக்கு ஒரு பிடி மண்ணைக்கூட கொடுக்க மாட்டோம்: அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.