ETV Bharat / state

தேனியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் வருவார்கள் - வருண் சக்கரவர்த்தி!

காயத்திலிருந்து இளம் வீரர்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என இந்திய கிரிக்கெட் அணி வீரர் வருண் சக்கரவர்த்தி கூறி உள்ளார்.

தேனியில் இருந்து இந்தியாவிற்கான கிரிக்கெட் வீரர்கள் வருவார்கள் - வருண் சக்கரவர்த்தி

author img

By

Published : Jun 7, 2023, 1:29 PM IST

தேனி: தேனி அருகே உள்ள தப்புக்குண்டு மைதானத்தில் தேனி கிரிக்கெட் அகாடமி சார்பில் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக சேட்டிலைட் சென்டர் திறப்பு விழா நேற்று (ஜூன் 6) நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி மையத்தை திறந்து வைத்தனர்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் வருண் சக்கரவர்த்தி செய்தியாளர் சந்திப்பு

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வருண் சக்கரவர்த்தி, “தேனியில் ஒரு கிரிக்கெட் சேட்டிலைட் சென்டர் தொடங்கி இருக்கிறார்கள். இது ஒரு நல்ல மற்றும் சிறந்த முன்னெடுப்பாக நான் பார்க்கிறேன். இதனை ஏற்படுத்திக் கொடுத்த அனைவருக்கும் எனது நன்றி மற்றும் வாழ்த்துகள். இதன் மூலம் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கிறது.

இங்கு கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதனைப் பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இங்கு பல விளையாட்டு வீரர்களை பார்க்கிறேன். கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள் மைதானத்தில் தினமும் இரண்டு மணி நேரமாவது செலவிட வேண்டும்.

பயிற்சி மேற்கொள்ளும்போது கிரிக்கெட் குறித்து பல விஷயங்கள் தானாகவே அவர்களுக்குத் தெரிய வரும். இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் தேனியில் இருந்து சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உருவாவார்கள் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மற்றும் விளையாடும்போது காயங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று.

கிரிக்கெட் வீரர்கள் முறையான உடற்பயிற்சி மேற்கொண்டு உடலை கட்டுக்குள் வைத்திருந்தாலே போதும், அவர்கள் காயங்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம்” என கூறினார். முன்னதாக, இளம் கிரிக்கெட் வீரர்கள் உடன் வருண் சக்கரவர்த்தி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மேலும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மற்றும் திருச்சியில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் சார்பாக திருச்சியில் கிரிக்கெட் அகாடமி ஒன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அகாடமியை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 8 அணிகளுடன் அதிரடியாக ஆரம்பமாகிறது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.