ETV Bharat / state

மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது - எஸ் பி சாய்சரண் தேஜஸ்வி

தேனி: தேவாரம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Husband arrested for beating wife to death

author img

By

Published : Aug 28, 2020, 2:50 PM IST

தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த தம்பதி செல்வக்குமார் (45) - காளியம்மாள்(35). இவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். கேரள மாநிலம் பரத்தோடு எனும் பகுதியில் கூலி வேலை செய்து வந்த இத்தம்பதி, கடந்த வாரம் சொந்த ஊர் திரும்பினர். இந்நிலையில், தேவாரம் அருகே டி.மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு காளியம்மாள் குடும்பத்துடன் சென்றார். அப்போது, தம்பதிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் காளியம்மாளை அவரது கணவர் செல்வக்குமார் கம்பால் சரமாரியாக தாக்கினார்.

இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் காளியம்மாள் உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த தேவாரம் காவல்துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இது குறித்து வழக்குப் பதிந்து செல்வகுமாரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.