ETV Bharat / state

பேருந்துக்குள் போராட்டம்! குண்டுக்கட்டாக வெளியேற்றிய காவல் துறையினர் ! - extra salary

தேனி : கம்பம் அரசு போக்குவரத்து பணிமனை கிளை ஓட்டுநராக பணிபுரிந்து வரும் பாலகிருஷ்ணன் ஊதிய உயர்வு கேட்டதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து பேருந்துக்குள் போராட்டம் நடத்திய அவரை காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.

பேருந்துக்குள் போராட்டம்! குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றிய காவல்துறையினர் !
author img

By

Published : Jul 29, 2019, 11:03 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(45) கம்பம் அரசு போக்குவரத்து பணிமனை கிளை(2ல்) ஓட்டுநராக பணிபுரிந்துவருகிறார். தொழிலாளர் சட்டப்படி உள்ள 8 மணி நேரம் மட்டும் பணிபுரியும் கொள்கை உடைய இவர் கம்பம் - திண்டுக்கல் வழித்தடத்தில் பேருந்து இயக்கி வந்தவர்.

இந்நிலையில், தற்போது கம்பம் - திண்டுக்கல் வழித்தடத்தில் வேகத்தடைகள் அதிகமானதால், பணி நேரம் 8 மணி நேரத்திற்கும் அதிகம் ஆகிறது. எனவே கூடுதல் நேரத்திற்கு ஊதியம் வேண்டும் என திண்டுக்கல் போக்குவரத்துக் கழக மேலாளருக்கு கடிதம் அனுப்பினார். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததால் 8 மணி நேரத்திற்கு உண்டான கம்பம் - செம்பட்டி வரை மட்டும் பேருந்தை இயக்கியதால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் பணி நீக்க உத்தரவினை கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் பாண்டியராஜன் பாலகிருஷ்ணனிடம் கொடுக்கவில்லை.

பேருந்துக்குள் போராட்டம்! குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றிய காவல்துறையினர் !

இதனையடுத்து அவரது பணி நீக்க காலம் முடிவடைந்ததால் பாலகிருஷ்ணன் இன்று பணிக்கு சென்றுள்ளார். இருப்பினும் அவருடன் பாண்டியராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் பேருந்துக்குள் இருந்தபடியே போராட்டம் நடத்தினார். தகவலறிந்த கம்பம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து பேருந்துக்குள் போராட்டம் நடத்திய பாலகிருஷ்ணனை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.

Intro:           மிகை ஊதியம் கேட்ட அரசுப்பேருந்து ஓட்டுநர் பணி நீக்கம். கம்பம் அரசுப்போக்குவரத்து பணி மனையில் பேருந்தில் அமர்ந்து பல மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்ட ஓட்டுநரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றிய காவல்துறையினர்.
Body: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(45). இவர் கம்பம் அரசுபோக்குவரத்து பணிமனை கிளை(2ல்) ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். மேலும் தொழிலாளர் சட்டப்படி உள்ள 8மணி நேரம் மட்டும் பணிபுரியும் கொள்கை உடைய இவர் கம்பத்தில் - திண்டுக்கல் வழித்தடத்தில் பேருந்து இயக்கி வந்தவர்.
இந்நிலையில், கம்பத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழிதடங்களில் அளவுக்கு அதிகமான வேகத்தடை, வேகதடுப்பு கம்பிகள் உள்ளதால் பணி நேரம் 8 மணி நேரத்திற்கு கூடுதல் ஆவதையடுத்து கூடுதல் நேரத்திற்கு மிகை ஊதியம் வேண்டும் என திண்டுக்கல் போக்குவரத்துக் கழக மேலாளருக்கு கடிதம் அனுப்பினார். அதில் கம்பத்தில் இருந்து திண்டுக்கல் வழித்தடங்களில் போக்குவரத்து இடையூறாக வேகத்தடைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
         இதனால் வழித்தடங்களில் நிர்வாகம் ஒதுக்கிய நேரத்தில் பஸ் நிலையங்கள் செல்ல முடியாது என்று தெரிவித்து கடிதம் அனுப்பினேன், அதன் மீது நடவடிக்கை எடுக்காததால் இனிமேல் இந்த வழித்தடத்தில் 8மணி நேரத்திற்குண்டான கம்பம் டூ செம்பட்டி வரை மட்டும் பேருந்து இயக்குவதாக தெரிவித்திருந்தார். மேலும் இவரது கோரிக்கைக்கு அதிகாரிகள் பதில் அளிக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை கம்பத்தில் பேருந்தை எடுத்தவர் திண்டுக்கல் செல்லாமல் செம்பட்டி வரை சென்று விட்டு திரும்பினார். இதனால் பாலகிருஷ்ணன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
         ஆனால் பணி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவினை கம்பம் அரசு போக்குவரத்து கழக பணி மனை மேலாளர் பாண்டியராஜன், பாலகிருஷ்ணனிடம் கொடுக்கவில்லை, இந்நிலையில் வழக்கம்போல் இன்று பணிக்கு வந்த பாலகிருஷ்ணன் பேருந்தை எடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த மேலாளர் பேருந்தை எடுக்கக் கூடாது என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து பணிமனையின் பிரதான கதவை அடைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த போராட்டத்தால் பணிமனையில் இருந்த மற்ற பேருந்துகள் வெளியேற முடியாமல் இருந்தது.
         பின்னர் இது குறித்து கம்பம் காவல்துறையினாருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பாலகிருஷ்ணனுடன் பேச்சுவார்தை நடத்த அழைத்தனர் ஆனால் அவர் பேருந்தை விட்டு கீழே இறங்காததால், அவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். பின்னர் பாலகிருஷ்ணனிடம், தொழிலாளர் பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றனர்.

Conclusion:இதனைத் தொடர்ந்து பிற தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாலகிருஷ்ணன் தனது தர்ணா பேராட்டத்தை கைவிட்டார்.
பேட்டி - பாலகிருஷ்ணன், ஓட்டுனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.