ETV Bharat / state

"எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் தீவிர ஆலோசனை"- துணைமுதலமைச்சர் ஓ.பி.எஸ் சூசகம்!

தேனி: நளினி, பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை ஆளுநரின் தீவிர பரிசீலனையில் உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
author img

By

Published : Aug 29, 2019, 10:33 PM IST

கேரளாவில் பெய்த கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததையடுத்து தமிழ்நாட்டிற்குத் திறக்கப்பட்ட தண்ணீரால் வைகை அணையின் நீர்மட்டம் 50அடிக்கும் அதிகமாக உயர்ந்தது.

இதனால் மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள இரு போக பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இந்நிலையில், வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை திறந்து வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில்,

"வைகை அணையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் 1,231 தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்வது தொடர்பாக கருத்துகள் பெறப்பட்டு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் முடிவு அறிவிக்கப்படும் .

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் நிலவும் வறட்சியைப் போக்க 12 கோடி ரூபாய் செலவில் கண்டமனூர் பகுதியில் குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கு சென்ற மாதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முழுமையாக வறட்சியைப் போக்க கடமலைக்குண்டு பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நளினி, பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை குறித்து, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு ஆளுநரின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் விடப்பட்டுள்ளதால், அவரின் தீவிர பரிசீலனையில் இருப்பதாக” தெரிவித்தார்.

வைகை அணையில் நீர் திறப்பு - துணைமுதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு

இந்நிகழ்வில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, எம்.எல் ஏக்கள் ஜக்கையன், தேனி எம்.பி. ரவீந்திரநாத்குமார் மற்றும் தேனி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Intro: எழுவர் விடுதலை ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டு ஆளுநரின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் விடப்பட்டுள்ளதால் கவர்னரின் பரிசீலனையில் உள்ளதாக துணை முதல்வர் ஓ.பி.எஸ். வைகை அணையில் பேட்டி.

Body: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து திண்டுக்கல் மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு முதல் போக சாகுபடிக்காக இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டன. கேரளாவில் பெய்த கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததையடுத்து தமிழகத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீரால் வைகை அணையின் நீர்மட்டம் 50அடிக்கும் அதிகமாக எட்டியது.
இதனால் மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள இரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று மாலை முதல் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீரை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
இன்று முதல் 45 நாட்களுக்கு வினாடிக்கு 900 கன அடி தண்ணீரும், அதன்பின்பு 75 நாட்களுக்கு அணையில் உள்ள தண்ணீர் இருப்பை பொறுத்து முறைவைத்து மொத்தம் 120 நாட்களுக்கு 6789 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியில் சாகுபடி நிலங்களில் முதல் போக சாகுபடி பரப்பளவு 45 ஆயிரத்து 41ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். விவசாயிகள் வைகை அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் நீர் மேலாண்மைத் துறை மேற்கொண்டும் அதிக மகசூல் பெறுமாறு பொதுப்பணித்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறுகையில், வைகை அணையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் 1,231 தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்வது தொடர்பாக கருத்துக்கள் பெறப்பட்டு முதல்வர் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, இன்னும் ஒரு மாதத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்திற்கு உடன் செல்லாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இது தொடர்பாக முதல்வர் ஏற்கனவே விளக்கமளித்து விட்டதாக தெரிவித்தார். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்த பிறகு 18ஆம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படும் என்றார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் நிலவும் வறட்சியை போக்க 12 கோடி ரூபாய் செலவில் கண்டமனூர் பகுதியில் குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கு சென்ற மாதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முழுமையாக வறட்சியை போக்க கடமலைக்குண்டு பகுதியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நளினி, பேரறிவாளன் உட்பட 7பேர் விடுதலை குறித்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டு ஆளுநரின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் விடப்பட்டுள்ளதால்,அவரின் தீவிர பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்தார்.

Conclusion: இந்நிகழ்வில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, எம்.எல் ஏக்கள் ஜக்கையன், நீதிபதி மற்றும் தேனி எம்.பி. ரவீந்திரநாத்குமார் மற்றும் தேனி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

பேட்டி : ஓ.பன்னீர்செல்வம் (துணை முதல்வர் )
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.