தேனி மாவட்டம் போடி சத்திரப்பாதை பகுதியைச் சேர்ந்தவர் வடமலைராஜபாண்டியன். இவர், தனது வீட்டின் கட்டுமான பணிகளுக்காக ஆண்டிபட்டியில் இருந்து பொருட்கள் வாங்கியுள்ளார். சரக்கு வாகனத்தை ஆண்டிபட்டியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ஓட்டினார்.
போடியை நோக்கி வந்து கொண்டிருந்த போது, நேற்று முன்தினம் (மே 28) பெய்த கனமழையால் மண் சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளத்தில் வாகனம் சிக்கியது. உடனடியாக சேற்றில் சிக்கிய வாகனத்தை மீட்கும் பணியில் வாகனத்தில் இருந்தவர்கள் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் வடமலைராஜபாண்டியன் மீது இரும்புக்கம்பிகள் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போடி காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கில் சீறிய வாகனத்தில் சிக்கிய ஆண் கரடி!