ETV Bharat / state

கிணற்றில் தவறி விழுந்து முன்னாள் ராணுவ வீரர் பலி! - Former army soldier

தேனி: சின்னமனூர் அருகே போதையில் கிணற்றில் தவறி விழுந்து முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ராணுவ வீரர் சுரேஷ்பாபு
author img

By

Published : Sep 14, 2019, 10:59 PM IST

தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுரேஷ்பாபு(52). இவர் கடந்த 12ஆம் தேதி சின்னமனூர்,வெள்ளையம்மாள்புரத்தில் உள்ள இவரது சித்தப்பா மகளன தமயந்தி வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு தமயந்தின் கணவர் பெருமாள், சுரேஷ்பாபு இருவரும் அங்குள்ள தோட்டத்திற்கு சென்று தங்கியதாகவும் அப்போது இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

மறுநாள் காலையில் பெருமாள் எழுந்து பார்க்கும்போது சுரேஷ்பாபுவை காணவில்லை. தமக்கு முன்பாகவே எழுந்து சொந்த ஊருக்கு சென்று இருக்கலாம் என எண்ணி, வீடு திரும்பியுள்ளார். ஆனால் சுரேஷ்பாபு வீட்டிற்கு திரும்பாத நிலையில் அவர் எங்கே சென்றார் என அவரது குடும்பத்தினர் தேடியுள்ளனர்.

கிணற்றில் தவறி விழுந்து முன்னாள் ராணுவவீரர் பலி

இதையடுத்து பெருமாளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரும் வெள்ளையம்மாள்புரம் பகுதியில் சுரேஷ்பாபுவை தேடி உள்ளனர். அப்போது, தோட்ட பகுதியில் உள்ள கிணற்றில் சுரேஷ்பாபு இறந்து பிணமாக மிதந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதையடுத்து உடனடியாக காவல் நிலையத்திற்கு, தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் சுரேஷ்பாபுவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைகக்ப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சுரேஷ்பாபு குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro: சின்னமனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முன்னாள் ராணுவவீரர் பலி, சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை.Body: தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு(52). முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி சின்னமனூர் அருகே உள்ள வெள்ளையம்மாள்புரத்தில் இவரது சித்தப்பா மகளன தமயந்தி வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் சகோதரியின் கணவர் பெருமாளுடன் அங்குள்ள தோட்டத்திற்கு சென்று இரவு தங்கியதாகவும், இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் இரவில், அங்கேயே இருவரும் தங்கி உள்ளனர். மறுநாள் காலையில் பெருமாள் எழுந்து பார்க்கும் போது சுரேஷ்பாபுவை காணவில்லை. ஒருவேளை தமக்கு முன்பாக எழுந்து சொந்த ஊருக்கு சென்று இருக்கலாம் என எண்ணி, வீடு திரும்பியுள்ளார். ஆனால் சுரேஷ்பாபு வீட்டிற்கு திரும்பாத நிலையில் அவர் எங்கே சென்றார் என அவரது குடும்பத்தினர் தேடியுள்ளனர். இதனை யடுத்து பெருமாளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் வெள்ளையம்மாள்புரம் பகுதியில் சுரேஷ்பாபுவை தேடி உள்ளனர்.
இந்நிலையில் இரண்டு நாட்கள் கழித்து இவர்கள் தங்கியிருந்த பகுதியில் உள்ள புதர்நிறைந்த கிணறு ஒன்றில் தேடியுள்ளனர். அங்கே சுரேஷ்பாபு இறந்து பிணமாக மிதந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக ஒடைபட்டி காவல் நிலையத்திற்கு, தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் சுரேஷ்பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
Conclusion:
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஓடைப்பட்டி காவல்துறையினர் சுரேஷ்பாபு குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.