தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டகணல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (நவ-2)இரவு பெய்த கனமழையால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து சற்று அதிகரித்தது. பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வந்தது. இதனால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் நீர்வரத்து குறைந்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் தடை விதிப்பதாக தேவதானப்பட்டி வனசரகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதையும் படிங்க: கும்பக்கரை அருவியில் குளிக்க 14 நாட்களுக்குப் பின் அனுமதி