ETV Bharat / state

மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனைக் கொன்ற தந்தை! - மகனைக்கொன்ற தந்தை

தேனி: திருமண வாழ்வு கசந்த காரணத்தினால் தினமும் குடித்து விட்டு தந்தையிடம் தகராறில் ஈடுபட்ட மகனை; தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

father killed the son in Theni for family problem
author img

By

Published : Oct 7, 2019, 8:50 PM IST

தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகில் அமைந்துள்ள மஞ்சிநாயக்கன்பட்டி கிராமத்தில் தங்கராஜ் என்பவர் கோழிக்கடை நட்த்தி வருகிறார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், மலைச்சாமி, ராமு என இரண்டு மகன்களும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

மூத்தமகன் மலைச்சாமி பெரம்பலூரில் உள்ள தனியார் டயர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் தேனி அருகே உள்ள முத்துத்தேவன்பட்டியைச் சேர்ந்த ஜோதிகா என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து முடிந்த சில நாட்களிலேயே கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜோதிகா கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். தனது திருமன வாழ்க்கை கசந்த காரணத்தினால் மலைச்சாமி விரக்தியில் தினமும் மது அருந்திவிட்டு தனது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இன்றும் வழக்கம் போல் மது போதையில் வந்த மலைச்சாமி தனது தந்தை தங்கராஜ் உடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ் தான் வைத்திருந்த கத்தியால் மலைச்சாமியின் இடுப்பு பகுதி மற்றும் கழுத்துப் பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.

மகனைக்கொலை செய்த தந்தை தங்கராஜ்

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த மலைச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் தங்கராஜை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை தந்தையே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'மங்குனி அமைச்சர் 2021இல் சிறை செல்வது உறுதி' - காட்டமான விருதுநகர் எம்.பி!

Intro: தேனி அருகே குடித்துவிட்டு தகறாரில் ஈடுபட்ட மகனை குத்திக் கொன்ற தந்தை. திருமணம் ஆன ஒரே மாதத்தில் பெற்ற மகனையே கொலை செய்த சம்பவத்தினால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி.
Body: தேனி அருகே உள்ள பூதிப்புரம் கிராமத்திற்கு அடுத்துள்ளது மஞ்சிநாயக்கன்பட்டி கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த கோழிக்கடை நடத்தி வருபவர் தங்கராஜ் (59) இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு மலைச்சாமி (29) ராமு என்ற இரண்டு மகன்களும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
மூத்தமகன் மலைச்சாமி பெரம்பலுரில் உள்ள தனியார் டயர் நிறுவணத்தில் பணிபுரிந்து வருகிறார், இவருக்கு தேனி அருகே உள்ள முத்துதேவன்பட்டியைச் சேர்ந்த ஜோதிகா என்ற பெண்ணை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர்.
திருமணம் முடிந்த சில நாட்களிலே கணவன் மணைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜோதிகா கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். தனது திருமன வாழ்க்கை கசந்த காரணத்தினால் விரக்தியில் தினமும் மது அருந்திவிட்டு தனது தந்தையடன் தகறாரில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இன்றும் வழக்கம் போல் தனது வீட்டிற்கு மது போதையில் வந்த மலைச்சாமி தனது தந்தை தங்கராஜ் உடன் தகறாரில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த தந்தை தங்கராஜ் தான் வைத்திருந்த கத்தியால் மகனை இடுப்பு பகுதி மற்றும் கழுத்துப் பகுதியில் குத்தியுள்ளார், இதில் ரத்தம் சொட்ட சொட்ட மகன் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியானார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மகனை கொலை செய்த தந்தையை கைது செய்து விசாரணைக்காக அழைந்துச் சென்றனர். மேலும் குறித்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிந்து வசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Conclusion: திருமண வாழ்க்கை கசப்பான காரணத்தினால் மதுபோதையில் தகறாரில் ஈடுபட்ட பெற்ற மகனையே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.