ETV Bharat / state

வைகை அணையின் நீர்மட்டம் 29 அடியாக சரிவு; கலக்கத்தில் விவசாயிகள்!

தேனி: வைகை அணையில் நீர்மட்டம் 29 அடியாக சரிந்துள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

வைகை
author img

By

Published : Jul 6, 2019, 11:48 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. அணையின் மொத்த உயரம் 71 அடியாகும். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் பாசனத்திற்கு ஆதாரமாக விளங்கும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் தற்போது நீர் வரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓரளவு மழை பெய்து வந்ததால் தொடர்ந்து 40 அடிக்கு மேல் வைகையில் தண்ணீர் இருந்து வந்தது. குறிப்பாக கடந்தாண்டு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்த தென்மேற்கு பருவமழையால் அதன் முழு கொள்ளளவை எட்டி நீர் நிரம்பியது.

வைகை அணை

இதனால், குடிநீர், விவசாய பாசனம் ஆகியவற்றிற்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து, அணையின் நீர்மட்டம் சற்று குறையத் தொடங்கியது. அத்துடன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை கை கொடுக்காததால் இந்த ஆண்டின் தொடக்கம் முதலே அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்தது 29அடியாகச் சரிந்துள்ளது.

எனவே, விவசாயிகள் பங்களிப்புடன் கூடிய குடி மராமத்து பணிகள் மூலம் தற்போது ஏரி குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசு வைகை அணையையும், தூர் வாரி மழைக் காலங்களில் கிடைக்கின்ற தண்ணீரைச் சேமித்து வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் செய்தால் மட்டுமே வருங்காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கலக்கத்தில் விவசாயிகள்

Intro: தென் மாவட்டத்தின் நீர் ஆதாரமான வைகை அணையின் நீர் வரத்து முற்றிலும் நின்றது. 30 அடிக்கும் கீழ் சரிந்த நீர்மட்டம்.
ஆரம்பளியில் மழை பெஞ்சா! அம்மச்சியாபுரத்தில் நெல் விளையும்! வைகை நதி நடந்தா! வயக்காடு முந்தி விரிக்கும்! என்று சொல்லுமளவிற்கு இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 29 அடியாக சரிந்துள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Body: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. அணையின் மொத்த உயரம் 71 அடியாகும். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர், பாசனத்திற்கு ஆதாரமாக விளங்கும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் தற்போது நீர் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓரளவு மழை பெய்து வந்ததால் தொடர்ந்து 40 அடிக்கு மேல் வைகையில் தண்ணீர் இருந்து வந்தது.
குறிப்பாக கடந்த ஆண்டு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்த தென்மேற்கு பருவமழையால் அதன் முழு கொள்ளளவை எட்டி நீர் நிரம்பியது. இதனால் குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் சற்று குறையத் தொடங்கியது. அத்துடன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை கை கொடுக்காததால் இந்த ஆண்டின் தொடக்கம் முதலே அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை என்றாலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முல்லைப் பெரியாறு அணைக்கும் நீர் வரத்து இல்லாததால் வைகை அணைக்கு தண்ணீர் திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 29அடியாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு விவசாயம் மற்றும் குடிநீருக்கு இதே நாளில் 960 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தற்போது குடிநீருக்கு மட்டும் 60 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எப்போதும் இல்லாத அளவில் இந்த ஆண்டு வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், தென்மாவட்டங்களில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன தேவைக்கு முக்கிய ஆதாரமாக திகழ்கின்ற வைகை அணையில், சுமார் 15 அடிவரை வண்டல் மண் படிந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு வைகை அணை நிரம்பியும் சில மாதங்களிலேயே நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்தது. அணை கட்டப்பட்டு 60 ஆண்டுகளாகியும் தற்போது வரை தூர்வாரப்படாமல் வண்டல் படிந்துள்ளது.
எனவே விவசாயிகள் பங்களிப்புடன் கூடிய குடி மராமத்து பணிகள் மூலம் தற்போது ஏரி குளங்களைத் தூர் வாரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு வைகை அணையையும், தூர் வாரி மழைக் காலங்களில் கிடைக்கின்ற தண்ணீரை சேமித்து வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்தால் மட்டுமே வருங்காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும் என்கின்றனர்.

Conclusion: பேட்டி : சீனிராஜ் - விவசாயி, தேனி.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.