தேனி: கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் வனத்துறையினருக்கு கட்டப்பனை பகுதியில் இருந்து குமுளி பகுதிக்கு யானை தந்தங்கள் கடத்தப்பட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து வனத்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் வல்லக்கடவு பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் வந்த ஒரு காரை சோதனை செய்தபோது கார் டிக்கியில் இருந்த யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது.
காரை ஓட்டி வந்த சுவர்ணகிரியை சேர்ந்த அருண் என்பவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த விசாரணையில் 12 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய தந்தத்தை குமுளிக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார். இவரிடம் வனத்துரையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் உட்பட 3 பேர் வீரமரணம்!