ETV Bharat / state

தேனி வழியாக சொந்த ஊர் திரும்பிய துபாய் தமிழர்கள் - லோயர்கேம்ப் சோதனைச்சாவடி

தேனி: துபாயிலிருந்து சொந்த ஊர் திரும்பிய 17 தமிழர்கள் தமிழ்நாடு–கேரள எல்லையில் உள்ள லோயர்கேம்ப் சோதனைச்சாவடி வழியாக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Dubai return tamilians going to their native

author img

By

Published : Jul 6, 2020, 6:04 PM IST

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டு, தீவிரக் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதன் காரணமாக, வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்புவதில் சிரமம் ஏற்பட்டது.

இதனைக் கருத்தில்கொண்ட மத்திய அரசு வெளிநாடுவாழ் இந்தியர்களைச் சொந்த ஊர் அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. இந்நிலையில், துபாயில் இருந்து சொந்த ஊர் திரும்புவதற்காக விண்ணப்பித்திருந்த 17 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் நேற்று கேரள மாநிலத்திலுள்ள கொச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

இவர்களை கேரள அரசு இடுக்கி மாவட்டம் குமுளி வழியாக தேனி மாவட்டத்திற்கு அனுப்பிவைத்தது. இதனையடுத்து, லோயர்கேம்ப்பிலுள்ள தேனி மாவட்ட சோதனைச் சாவடி முகாமில் 17 பேரும் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையாான உதவிகளை வருவாய்த் துறையினர் மேற்கொண்டனர்.

பின்னர், இவர்கள் அனைவரும் இ-பாஸ் பெற்று தனித்தனி வாகனங்கள் மூலம் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.