ETV Bharat / state

‘வீட்டை விட்டு வெளியே வராதீங்க!’ - தூய்மை பணியாளர்களின் பணிவான வேண்டுகோள்!

தேனி : கரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தேனி துப்புரவு பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Breaking News
author img

By

Published : Mar 28, 2020, 8:30 AM IST

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா நோய்த் தொற்று இந்தியாவிலும் அடுத்தடுத்து பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்த அபாயகரமான நோய்த்தொற்று பரவாமல் தடுத்திட பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளார்.

இதில் மருத்துவம், பொது சுகாதாரம், வருவாய், மற்றும் காவல் உள்ளிட்ட துறைகளுக்கு விலக்களிக்கப்பட்டு பொதுமக்களின் அத்தியாவசிய சேவைகள் தடைபடாத வகையில் செயல்படுகின்றன.

இந்நிலையில் நோய்த்தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் வீட்டின் உள்ளே இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர் தேனி தூய்மைப் பணியாளர்கள், தேனி அல்லிநகரம் நகாராட்சியில் சுமார் 250க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர்.

நகராட்சியில் உள்ள 33 வார்டுகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மற்றும் நகரின் முக்கிய பகுதிகளான மதுரை, பெரியகுளம், கம்பம் சாலைகள், எடமால் தெரு, பகவதியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘வீட்டை விட்டு வெளியே வராதீங்க!’ - தூய்மை பணியாளர்களின் பணிவான வேண்டுகோள்!

தற்போது கரோனா நோய்த் தொற்று காரணமாக ஊடரங்கு உத்தரவு அமலில் உள்ள பொதுமக்களின் சுகாதாரத்தை காத்திட இவர்கள் அயராது பாடுபட்டுவருகின்றனர். கொடிய தொற்றுநோயான கோவிட்-19 பீதியால் அனைவரும் அச்சத்துடன் வாழ்ந்துவரும் சூழலிலும் மக்களுக்காக சேவை ஆற்றுவதை பெருமையாக கருதுகின்றனர், இந்த தூய மனம் படைத்த தூய்மைப் பணியாளர்கள்.

இவர்கள் பொதுமக்களிடம் வைக்கின்ற வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான்.

அது, “கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுத்திட உங்களுக்காக வெளியே இருந்து நாங்கள் பணியாற்றுகிறோம். நீங்கள் உங்கள் உயிரை காப்பாற்ற வீட்டின் உள்ளே இருங்கள் என்று இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கின்றனர். அரசு பிறப்பித்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி கரோனா நோயை விரட்டியடிப்போம்!” என்று அனைவரும் உறுதியேற்க எடுக்க வேண்டும்” என்கின்றனர்.
இதையும் படிங்க : கரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை - தனிமைப்படுத்தும் பணி தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.