ETV Bharat / state

பாஜகவுக்கு யார் சிறந்த அடிமை ஓபிஎஸ் - ஓபிஆர் இடையே போட்டி- உதயநிதி - திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி

பாஜகவிற்கும், நரேந்திர மோடிக்கும் யார் சிறந்த அடிமை என்பதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும், அவரது மகன் ரவீந்திரநாத்திற்கும் இடையே போட்டி நிலவுவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி விமர்சித்துள்ளார்.

dmk youth wing secretary criticize deputy cm and his son

author img

By

Published : Feb 10, 2021, 2:41 PM IST

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பின் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். திமுக தேனி தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெறும் இந்த பரப்புரையில் போடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பழனிசெட்டிபட்டி, போ.மீனாட்சிபுரம், போடி நகர், பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அல்லிநகரம், லட்சுமிபுரம், பெரியகுளம் நகர் மற்றும் தேவதானப்பட்டிக்குச் செல்கிறார்.

முதலாவதாக பழனிசெட்டிபட்டியில் பேசிய அவர், "சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவிற்கு பயந்து கொண்டு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சமாதி, அதிமுக தலைமை அலுவலகம் ஆகியவற்றை மூடி வைத்தனர். ஜெயலலிதா சமாதிக்கு வந்த அதிமுகவினர் கருணாநிதி சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினர். அத்தகைய பெருமைக்குரியவர் கருணாநிதி. ஆனால் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் ஜெயலலிதா, சசிகலா மற்றும் பொதுமக்கள் என யாருக்கும் விசுவாசமாக இல்லை.

பாஜகவுக்கு யார் அடிமை என்பதில் அப்பா - மகனுக்கு (ஓபிஎஸ் - ஓபிஆர்) இடையே போட்டியே நிலவுகிறது. ஓபிஎஸ் 10முறை மோடிஜி, என்றால் ஓ.பி.ஆர் 100 முறை மோடிஜி என்று சொல்லி வருகிறார். கரோனா காலத்தில் நாம் அனைவரும் தனிமையில் வீட்டில் இருந்தோம். ஆனால் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், தான் கொள்ளையடித்து சேர்த்த பணத்தை பதுக்குவதற்காக தனி விமானத்தில் மொரீசியஸ், மாலத்தீவு மற்றும் ஐலேன்ட் போன்ற நாட்டிற்கு பயணம் செய்தவர்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி

இவர்களுக்கு எல்லாம் தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போடி தொகுதியில் திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இங்கு வெற்றி பெற்று விட்டால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று விடும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.