ETV Bharat / state

ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுக கவுன்சிலர்: தொடரும் வேட்டை!

தேனி: பெரியகுளம் 8ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், துணை முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

author img

By

Published : Jan 8, 2020, 9:47 AM IST

அதிமுகவில் இணைந்த திமுக கவுன்சிலர்
அதிமுகவில் இணைந்த திமுக கவுன்சிலர்

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள 10 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக 7, பாஜக 1, திமுக 2 உறுப்பினர்களைப் பெற்றது. இதன்மூலம் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை அதிமுக சுலபமாகப் பெற்றது.

ஆனால், ஒன்றிய அளவில் ஆண்டிபட்டி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய மூன்று ஒன்றியங்களில் தலைவர் பதவிக்கான பெரும்பான்மை உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிமுக பெற்றது.

எஞ்சிய ஐந்து ஒன்றியங்களில், கடமலை-மயிலை, போடி ஆகிய ஒன்றியங்களில் அதிமுக, திமுக சமபலம் பெற்றது. மீதமுள்ள தேனி, பெரியகுளம், சின்னமனூர் ஆகிய மூன்று ஒன்றியங்களில் திமுக அதிகளவில் உறுப்பினர்களைப் பெற்று தலைவர் பதவியைப் பெறுவதில் சிக்கலின்றி அமைந்தது.

இந்நிலையில், மாவட்ட ஊராட்சியை கைப்பற்றியது போல, 8 ஒன்றியங்களையும், கைப்பற்றுவதில் அதிமுக முனைப்புக்காட்டிவந்தது. இதன் ஒருபகுதியாக சின்னமனூர் ஒன்றியத்தில் முதலாவது வார்டில் வெற்றிபெற்ற திமுக ஒன்றிய கவுன்சிலர், அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல், பதவியேற்பு முடிந்தவுடன், திமுக உறுப்பினர்களுடன் செல்லாமல் அதிமுகவினருடன் சென்றுவிட்டதாகவும் அவரை கண்டுபிடித்து தருமாறும் திமுகவினர் புகார் தெரிவித்துவருகின்றனர்.

இச்சம்பவம் ஓய்வதற்குள் பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள எட்டாவது வார்டு ஜெயமங்கலம் பகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அக்கட்சியின் உறுப்பினர் செல்வம் என்பவர், சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.

இதன்மூலம் 16 உறுப்பினர்கள் கொண்ட பெரியகுளம் ஒன்றியத்தில் அதிமுகவின் பலம் 7ஆக அதிகரித்துள்ளது. கூட்டணிக் கட்சியான தேமுதிகவிற்கு 1 உறுப்பினர் உள்ளதால் மொத்த ஆதரவு 8ஆக உள்ளது. 8 உறுப்பினர்களைக் கொண்ட திமுகவின் பலம் தற்போது 7ஆக சரிந்துள்ளது. இவர்களில் மேலும் சிலருக்கு அதிமுகவினர் வலைவிரித்துவருவதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவில் இணைந்த திமுக கவுன்சிலர்

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் என்பதால், பெரியகுளம் ஒன்றியத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்கு அதிமுகவினர் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றனர்.

வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ள மறைமுகத் தேர்தலன்று தலைவர், துணைத் தலைவர் பதவிகளைக் கைப்பற்றுவதற்கு ஆளும் கட்சியினர் மேலும் சில உறுப்பினர்களுக்கு வலைவீசிவருகின்றனர்.

இதையும் படிங்க: தொகுதி பங்கீடு குறித்து அதிமுக, பாமக இடையே பேச்சுவார்த்தை

Intro: பெரியகுளம் 8வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் துணை முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பெரும்பான்மை உறுப்பினர்கள் எண்ணிக்கை கிடைத்ததால் பெரியகுளம் ஒன்றியத்தை கைப்பற்றும் அதிமுக.!
Body: நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள 10 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக 7, பாஜக 1, திமுக 2 உறுப்பினர்களை பெற்றது. இதன் மூலம் மாவட்ட ஊராட்சித்தலைவர் பதவியை அதிமுக சுலபமாக பெற்றது. ஆனால் ஒன்றிய அளவில் ஆண்டிபட்டி, உத்தமபாளையம், கம்பம் ஆகிய 3ஒன்றியங்களில் தலைவர் பதவிக்கான பெரும்பான்மை உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிமுக பெற்றது. எஞ்சிய 5ஒன்றியங்களில், கடமலை – மயிலை, போடி ஆகிய ஒன்றியங்களில் அதிமுக, திமுக சமபலம் பெற்றது. மீதமுள்ள தேனி, பெரியகுளம், சின்னமனூர் ஆகிய 3 ஒன்றியங்களில் திமுக அதிகளவில் உறுப்பினர்களை பெற்று தலைவர் பதவியை பெறுவதில் சிக்கலின்றி அமைந்தது.
இந்நிலையில், மாவட்ட ஊராட்சியை கைப்பற்றியது போல, 8 ஒன்றியங்களையும், கைப்பற்றுவதில் அதிமுக முனைப்பு காட்டி வந்தது. இதன் ஒரு பகுதியாக சின்னமனூர் ஒன்றியத்தில் 1வது வார்டில் வெற்றி பெற்ற திமுக ஒன்றிய கவுன்சிலர், அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாகவும், கூறப்படுகிறது. மேலும் நேற்று பதவியேற்பு முடிந்தவுடன், திமுக உறு;பினர்களுடன் செல்லாமல் அதிமுகவினருடன் சென்று விட்;டதாகவும், அவரை கண்டிபிடித்து தருமாறும் திமுகவினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இச்சம்பவம் ஓய்வதற்குள் பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள 8வது வார்டு ஜெயமங்கலம் பகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அக்கட்சியின் உறுப்பினர் செல்வம் என்பவர், இன்று சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதன் மூலம் 16உறுப்பினர்கள் கொண்ட பெரியகுளம் ஒன்றியத்தில் அதிமுகவின் பலம் 7ஆக அதிகரித்துள்ளது. கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு 1 உறுப்பினர் உள்ளதால், மொத்த ஆதரவு 8ஆக உள்ளது. 8உறுப்பினர்களை கொண்ட திமுகவின் பலம் தற்போது 7ஆக சரிந்துள்ளது. இவர்களில் மேலும் சிலருக்கு அதிமுகவினர் வலைவிரித்து வருவதாக கூறப்படுகிறது. அமுமுக உறுப்பினர் ஒருவர் உள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் என்பதால், பெரியகுளம் ஒன்றியத்தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கு அதிமுகவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Conclusion: வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ள மறைமுகத் தேர்தலன்று தலைவர், துணைத் தலைவர் பதவிகளை கைப்பற்றுவதற்கு ஆளும் கட்சியினர் மேலும் சில உறுப்பினர்களுக்கு வலை வீசி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.