ETV Bharat / state

சோத்துப்பாறை அணையில் பேரிடர் கால செயல்முறை விளக்கம் - பேரிடர் கால செயல்முறை விளக்கம்

தேனி: பேரிடர் காலங்களில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வது குறித்து சோத்துப்பாறை அணையில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் செய்முறை விளக்கம் அளித்தனர்.

செயல்முறை விளக்கம்
செயல்முறை விளக்கம்
author img

By

Published : Sep 18, 2020, 3:49 PM IST

தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் முக்கிய நீர்நிலைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் விரைவில் தொடங்க உள்ளதால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உள்ளது.

இந்நிலையில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் செயல்றை விளக்கம் அளித்தனர்.

பெரியகுளம் அருகே உள்ள சோத்தப்பாறை அணையில் நடைபெற்ற இந்த செயல்முறையில் வீட்டில் உள்ள தண்ணீர் குடங்கள், கேன்கள், சமையல் சிலின்டர்கள், சிறுவர்கள் விளையாடும் பிளாஸ்டிக் பந்துகள், தகர டின்கள் உள்ளிட்ட 14வகை பொருட்களைக் கொண்டு எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம் என விளக்கம் அளிக்கப்பட்டது.

தற்போது கரோனா நோய் பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால், பேரிடர் காலங்களில் பணிபுரிய விருப்பமுள்ள தன்னார்வலர்களுக்கு மட்டும் இந்த செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பெரியகுளம் சார் ஆட்சியர் சினேகா, வருவாய்த்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், தன்னார்வலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.