வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தேனி மாவட்டத்திற்கு வருபவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்தி, 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சென்னையிலிருந்து சொந்த ஊரான தேனிக்கு வந்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தேவதானப்பட்டி அருகே மாவட்ட எல்லையில் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டார். இதில், அவருக்கு கரோனா அறிகுறி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும், கரோனா பாதிப்பில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னையிலிருந்து அவர் தேனிக்கு வந்திருப்பதால் தேனி, என்.ஆர்.டி.நகரில் உள்ள அவரது வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
மேலும், அவருடன் வந்த உதவியாளர்கள் மூன்று பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தேனி – அல்லிநகரம் நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் அவரது வீட்டுச் சுவற்றில் ஒட்டியுள்ளனர்.