ETV Bharat / state

18ஆம் கால்வாய் பகுதி பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு: தேனி விவசாயிகள் மகிழ்ச்சி! - பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

தேனி: 18ஆம் கால்வாய் பகுதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்திய நிலையில் இன்று (அக். 07) ஒருபோக சாகுபடிக்காக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தண்ணீர் திறந்துவைத்தார்.

மலர் தூவி தண்ணீர் திறந்துவைத்த மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்

author img

By

Published : Oct 7, 2020, 2:37 PM IST

தேனி மாவட்டம் உத்தமபாளையம், போடி ஆகிய தாலுகாக்களில் ஆற்றுநீர் வழித்தடம் இல்லாத பகுதிகளின் பாசன தேவைக்காக 18ஆம் கால்வாய்த் திட்டம் உருவாக்கப்பட்டது. முல்லைப் பெரியாற்றின் தலைமதகுப் பகுதியான லோயர்கேம்ப்பிலிருந்து 40.80 கி.மீ. தூரத்தில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், தேவாரம் சுத்தகங்கை வழியாக போடி வரையில் தண்ணீர் கொண்டுசெல்லப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும்போது இந்தக் கால்வாய் வழியாக ஒருபோக பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

இந்தாண்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் கேரளாவில் பெய்த தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து, 18ஆம் கால்வாய் பகுதி பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கைவிடுத்தனர். அதனை ஏற்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று (அக். 07) முதல் 30 நாள்களுக்கு விநாடிக்கு 98 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று (அக். 07) லோயர்கேம்ப் அருகேவுள்ள முல்லைப் பெரியாற்றிலிருந்து 18ஆம் கால்வாய்க்குத் தண்ணீர் திறந்துவைத்தார். முன்னதாக பூஜை வழிபாடு செய்து, கால்வாயின் மதகுகளை ஆட்சியர் இயக்கிவைத்து, மலர்த்தூவி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து 18ஆம் கால்வாய் பாசன விவசாயிகளும் கால்வாயில் வெளியேறிய தண்ணீரை மலர்த்தூவி வரவேற்றனர்.

இந்தத் தண்ணீர் திறப்பின் மூலம் உத்தமபாளையம், போடி ஆகிய தாலுகாக்களின் 13 கிராமங்களிலுள்ள 44 கண்மாய்கள் வாயிலாக 4614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியடைகின்றன.

இதேபோல் உத்தமபாளையம் அருகேவுள்ள பி.டி.ஆர்., தந்தை பெரியார் கால்வாய்களிலிருந்தும் இன்று மாவட்ட ஆட்சியர் தண்ணீர் திறந்துவைத்தார். விநாடிக்கு 100 கனஅடி வீதம் இன்றுமுதல் 120 நாள்களுக்கு 1037 மி. கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் இருப்பைப் பொறுத்து திறக்கப்பட்டது.

மலர்த்தூவி தண்ணீர் திறந்துவைத்த மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்

இதன்மூலம் தேனி, உத்தபாளையம் தாலுகாக்களுக்குள்பட்ட சின்னமனூர், சீலையம்பட்டி, வேப்பம்பட்டி, தர்மபுரி, கோவிந்தநகரம், பாலகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களின் ஐந்தாயிரத்து 146 ஏக்கர் பாசன நிலம் ஒருபோக பாசன பெறுகின்றது.

இந்நிகழ்ச்சிகளில் பெரியகுளம் துணை ஆட்சியர் சினேகா, வருவாய் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனால், 18ஆம் கால்வாய் பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

இதையும் படிங்க: திருவள்ளூர் கொசஸ்தலை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.