கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இரவு, பகல் பாராமல் உழைத்து வரும் இவர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களான கையுறை, காலுறை உள்ளிட்டவைகளை அணிந்து பாதுகாப்பான முறையில் பணியில் ஈடுபட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டம், அல்லிநகரம் பகுதியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு, நகராட்சி நிர்வாகம் கையுறை, காலுறைகளை சரிவர கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும் சிலருக்கு மட்டும் வழங்கப்படும் உபகரணங்களும் தரமற்றதாக இருப்பதால், தூய்மைப் பணியாளர்கள் கையுறைகளைப் பயன்படுத்துவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் தூய்மைப் பணியாளர்கள் வெறும் கைகளால் கழிவு நீர் வடிகாலில் இறங்கி சுத்தம் செய்கின்றனர். உழைப்பாளர்களைப் போற்றும் வகையில் இன்று கொண்டாப்படும் உழைப்பாளர் தினத்தில் பாதுகாப்பு இல்லாமல் உழைக்கும், துப்புரவுப் பணியாளர்களின் நிலை வேதனை அளிப்பதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் தேனி மாவட்டத்தில் தினம்தோறும், 150க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெள்ளைப்பூண்டு சந்தை மூடல் - ரூ.10 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கம்!