ETV Bharat / state

சிறுவர்களின் விநாயகர் ஊர்வலத்திற்கு போலீஸ் தடை - நீதிமன்றம் சென்று அனுமதி பெற்ற சிறுவர்கள் - Struggle to petition in the modern way

தேனியில் சிறுவர்களின் விநாயகர் ஊர்வலத்திற்கு காவல் துறை தடைவிதித்ததால் நீதிமன்றம் வரை சென்று சிறுவர்கள் அனுமதி வாங்கியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 4, 2022, 10:10 PM IST

தேனி: கம்பத்தில் உள்ள உத்தமபுரம் பகுதியில் சிறுவர்கள் ஒன்றிணைந்து தாங்களாவே சேமித்த பணத்தை வைத்து விநாயகர் சிலை வாங்கி வழிபட்டுள்ளனர். பின் அதனை கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்கையில் காவல் துறையினர் அந்த சிறுவர்களை தடுத்து நிறுத்தி, நீங்கள் அனுமதியின்றி இவ்வாறு செய்யக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

அதனால் அந்த சிலைகளை எடுத்துச் சென்று அவர்கள் வீட்டில் உள்ளேயே சிறுவர்கள் வைத்திருந்தனர். இதனால், அதிருப்தியடைந்த சிறுவர்கள், அந்த பகுதி இளைஞர்கள் உதவியுடன் சிலையை கரைக்க நீதிமன்றம் வரை சென்று அனுமதி வாங்கியுள்ளனர்.

அனுமதி பெற்ற பின்பும் காவல் துறையினர் சிலையை கரைப்பதற்கு அனுமதி வழங்கவில்லை எனக் கூறி, இன்று (செப்.04) கம்பத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு எதிராக விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க அனுமதிக்க கோரி நூதன முறையில் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.

மகாத்மா காந்தி சிலைக்கு மனு அளிக்க வந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்

மகாத்மா காந்தி சிலைக்கு மனு அளிக்க வந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மனு அளித்துவிட்டுச் சென்றனர். இதுகுறித்து சிறுவர்கள் கூறுகையில், சிறுவர்களாகிய எங்களை காவல் துறையினர் கடவுளை வணங்குவதற்கு தடை செய்வது எந்த வகையில் நியாயம்” என கேள்வி எழுப்பினர்.

விநாயகர் சதுர்த்தி அன்றிலிருந்து இன்று வரை இந்த பகுதியில் சிறுவர்கள் காவல் துறையுடன் தொடர்ந்து அனுமதி கேட்டு சிறு சிறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விநாயகர் சிலை ஊர்வலம் - கடற்கரைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.