ETV Bharat / state

முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம்: வலுக்கும் எதிர்பார்ப்பு... நெருங்கும் அறிவிப்பு நாள்!

author img

By

Published : Oct 5, 2020, 7:33 AM IST

தேனி: நாளை மறுநாள் (அக்.07) அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளை துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப்பேசினார்.

முதலமைச்சர் வேட்பாளர்: வலுக்கும் எதிர்ப்பார்ப்பு! நெருங்கும் அறிவிப்பு நாள்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் கட்சிக்குள் எழுந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்திலும் இது தொடர்பாக கடுமையான விவாதங்கள் நடைபெற்றதாக தெரிய வருகிறது.

இதையடுத்து அக்டோபர் 7ஆம் தேதி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஒருபுறம் முதலமைச்சர் எடப்பாடி மூத்த அமைச்சர்களை சந்தித்து வரும் நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான தேனிக்குச் சென்று, அங்கு தனது இல்லத்தில் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுடன் தொடர் சந்திப்பு மற்றும் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.

சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமையன்று(அக்.02) தனது சொந்த ஊருக்குச் சென்ற ஓ.பி.எஸ்ஸை சென்னை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான அதிமுக பிரமுகர்கள் சந்தித்து சென்றனர். இதன்தொடர்ச்சியாக நேற்றிரவு(அக்.04) வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உசிலம்பட்டி, மேலூர், சோழவந்தான் மற்றும் மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் சந்தித்துச் சென்றனர்.

துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம்

போடியில் உள்ள தனது சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்திற்குச் சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை, வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ மனோகரன், வேளச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ அசோக், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜா ஆகியோர்களும் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் உடனிருந்தனர்.

வருகின்ற அக்டோபர் 7ஆம் தேதி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என அறிவிக்கப்பட உள்ள சூழலில் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுவினர் சந்தித்து வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் அக்.7ல் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.