ETV Bharat / state

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக உதவியாளர் கைது - விஏஓ தலைமறைவு!

தேனி: ஆண்டிபட்டியில் பூர்வீக பட்டாவில் பெயர் சேர்க்க 16 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் தலைமறைவாகவுள்ள கிராம நிர்வாக அலுவலரை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

brieferry
brieferry
author img

By

Published : Jan 24, 2020, 11:32 AM IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் பூர்வீக சொத்துக்கான பட்டாவில் விடுபட்ட தனது பெயரைச் சேர்க்க திம்மரசநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் காளிதாசிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். அப்போது பட்டாவில் பெயர் சேர்க்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின்னர் நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் நடந்த பேரத்தில் 16 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் என முத்துப்பாண்டியிடம் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முத்துப்பாண்டி இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை முத்துப்பாண்டியிடம் கொடுத்தனர். பணத்தைப் பெற்றுக்கொண்ட முத்துப்பாண்டி ரூ.16 ஆயிரம் கொண்டு வந்துள்ளதாக கிராம நிர்வாக அலுவலரிடம் தொலைபேசியில் கூறியுள்ளார். பணத்தை தனது உதவியாளர் குமாரிடம் கொடுத்தவிடும்படி கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸ் கூறியுள்ளார்.

முத்துப்பாண்டி 16 ஆயிரத்தை உதவியாளர் குமாரிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரை கையும் களவுமாகப் பிடித்தனர். இதன் தொடர்ச்சியாக அங்கு வந்த திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் நாகராஜன், ஆய்வாளர் கீதா தலைமையிலான 10க்கும் மேற்பட்ட காவல் துறையினர், கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரிடம் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

லஞ்சம் வாங்கிய உதவியாளர் கைது

லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறை சோதனை நடத்தியது குறித்து தெரிந்துகொண்ட கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸ் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரிடம் விசாரணை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றிய காவல் துறையினர், லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸ், உதவியாளர் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். உதவியாளர் குமாரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

மேலும், தலைமறைவாகவுள்ள கிராம நிர்வாக அலுவலர் காளிதாசை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

Intro: ஆண்டிபட்டியில் பூர்வீக பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.16 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் கைது. கிராம நிர்வாக அலுவலர் தலைமறைவு.
Body: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் பூர்வீக சொத்துக்கான பட்டாவில் விடுபட்ட தனது பெயரை சேர்க்க திம்மரசநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் காளிதாசிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். அப்போது பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அதன்பின்னர் நடைபெற்ற பலகட்ட பேரத்தில் ரூ.16 ஆயிரம் கொடுக்கவேண்டும் என்று முத்துப்பாண்டியிடம் கேட்கப்பட்டது. இதுகுறித்து முத்துப்பாண்டி லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையிடம் புகார் கொடுத்தார்.
இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை முத்துப்பாண்டியிடம் கொடுத்து அனுப்பினர். ரூ.16 ஆயிரம் கொண்டு வந்துள்ளதாக கிராம நிர்வாக அலுவலரிடம் தொலைபேசியில் பேசினார். பணத்தை தனது உதவியாளர் குமாரிடம் கொடுத்தவிடும்படி கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸ் கூறியுள்ளார். உதவியாளர் குமாரிடம் ரூ.16 ஆயிரத்தை முத்துப்பாண்டி கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் குமாரை கையும் களவுமாக பிடித்தனர்.
இதன் தொடச்சியாக அங்கு வந்த திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக்கண்காணிப்பாளர் நாகராஜன், ஆய்வாளர் கீதா தலைமையிலான 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர், கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரிடம் 4 மணிநேரம் விசாரணை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியது குறித்து தெரிந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸ் தலைமறைவாகி விட்டார்.
இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரிடம் விசாரணை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி போலீசார், லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸ், உதவியாளர் குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உதவியாளர் குமாரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் காளிதாசை போலீசார் தேடி வருகின்றனர்.
Conclusion: பட்டாவில் பெயரை சேர்க்க கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் லஞ்சம் வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

For All Latest Updates

TAGGED:

#Theni #VAO
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.