ETV Bharat / state

"ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல் ஆளாக மாலை அணிவிப்பேன்" - அந்தர்பல்டி அடித்த திமுக எம்எல்ஏ! - ஆண்டிபட்டி

தேனி: ஆண்டிபட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முல்லைப்பெரியாறு வாய்க்கால் திட்டத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தால் முதல் ஆளாக மாலை அணிவிப்பேன் என்று ஆண்டிபட்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ மகாராஜன் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.எல்.ஏ மகாராஜன்
author img

By

Published : Aug 30, 2019, 10:14 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் மகாராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, "மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயத்திற்காக முல்லைப்பெரியாறு அணை மற்றும் வைகை அணைகளில் இருந்து தண்ணீரை திறக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டியிட்ட ஆண்டிபட்டி சட்டமன்றத்தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

ஆண்டிபட்டி மக்களின் நீண்டநாள் திட்டமான முல்லைப்பெரியாறு வாய்க்கால் திட்டம் நிறைவேற்றப்படும் என்று எந்த மேடையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கிறாரோ... அந்த மேடையில் அவருக்கு தான் முதல் ஆளாக மாலை அணிவிப்பேன்" என்று தெரிவித்தார்.

Intro: ஆண்டிபட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முல்லைப்பெரியாறு வாய்க்கால் திட்டத்தை துணை முதல்வர் ஓ.பி.எஸ் அறிவித்தால் முதல் ஆளாக மாலை அணிவிப்பேன். ஆண்டிபட்டி திமுக எம்.எல்.ஏ பேட்டி.Body: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தி.மு.க நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க உறுப்பினர் மகாராஜன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் 23 நிமிடங்கள் பேசினேன். நான் பேசியதை துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கேட்டுக் கொண்டிருந்தார். ஆண்டிபட்டி பகுதியில் வறட்சியை போக்கும் முல்லைப் பெரியாறு வாய்க்கால் திட்டத்தினை நிறைவேற்றக் கோரியும் பேசினேன்.
மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயத்திற்காக முல்லைப்பெரியாறு அணை மற்றும் வைகை அணைகளில் தண்ணீரை திறக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டியிட்ட ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
ஆண்டிபட்டி மக்களின் நீண்டநாள் திட்டமான முல்லைப்பெரியாறு வாய்க்கால் திட்டம் நிறைவேற்றப்படும் என்று எந்த மேடையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கிறாறோ... அந்த மேடையில் அவருக்கு நான் தான் முதல் ஆளாக மாலை அணிவிப்பேன். ஏனென்றால் மக்கள் என்னை நம்பி வாக்களித்துள்ளனர். அவர்களுக்கான திட்டத்தினை நிறைவேற்றும் வரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர், வருவாய்த்துறையினர் அழைத்தாலும் எந்த ஒரு அரசு விழாக்களிலும் நான் பங்கேற்க போவதில்லை. திட்டம் நிறைவேற்றும் வகையில் அரசு விழாக்களை புறக்கணிப்பேன். என்றார்.Conclusion: பேட்டி : ஏ.மகாராஜன் ( ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.