தேனி: அண்மையில் தமிழக அரசு மின்சார கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. இந்த கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
அதன்படி அதிமுக கழக அமைப்புச் செயலாளர் ஜக்கையன் தலைமையில் தேனியில் உள்ள பங்களா மேடு பகுதியில், மின்கட்டண உயர்வை கண்டித்து சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதேபோல் சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டியும் அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓபிஎஸ் இன் சொந்த மாவட்டமான தேனியை சேர்ந்த அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஆதரவாக திரண்டு திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்தியது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: திமுகவை எதிர்க்க அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் - சசிகலா