ETV Bharat / state

ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் சொன்ன அட்வைஸ் - O Panneerselvam advices dmk chief stalin

தேனி: புதிதாக ஆட்சி பொறுப்பில் அமரவிருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். பொறுப்புகளை உணர்ந்து அரசு கடமைகளை ஆற்றிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் சொன்ன அட்வைஸ்
ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் சொன்ன அட்வைஸ்
author img

By

Published : May 3, 2021, 5:18 PM IST

திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மைடன் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. இதில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 11,021 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் இன்று அதிகாலை ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்த தமிழ் பெருங்குடி மக்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள். மக்கள் எங்களை ஜனநாயக கடமையாற்றிடப் பணித்திருக்கிறார்கள்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

புதிதாக ஆட்சிப் பொறுப்பில் அமர இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். எதிர்வரும் காலங்களில் பொறுப்புகளை உணர்ந்து அரசினுடைய கடமைகளை அவர் முறையாக ஆற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

இதையும் படிங்க:'கரோனா பேரிடரை ஸ்டாலின் ஒழிப்பார்' - பாலகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.