ETV Bharat / state

மழை பெற வேண்டி அதிமுக சார்பில் யாக பூஜை! - ADMK

தேனி: திமுகவிற்கு போட்டியாக வறட்சியை போக்குவதாக மழை பெற வேண்டி அதிமுக சார்பில் பூஜை நடத்தப்பட்டது.

அதிமுக
author img

By

Published : Jun 22, 2019, 5:51 PM IST

தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத அளவிற்கு குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சென்னை உட்பட பல பகுதிகளில் உணவு விடுதிகள், ஐ.டி. நிறுவனங்கள் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும் வரை தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளன. அரசின் அலட்சியத்தாலே குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதிமுக சார்பில் நடத்துப்பட்ட யாக பூஜை

இதனையடுத்து குடிநீர் பிரச்னையை தீர்க்காத தமிழ்நாடு அரசைக் கண்டித்து இன்று திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர் தலைமையில் மழை வேண்டி கோயிலில் சிறப்பு யாக பூஜை நடத்திட வேண்டும் என முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கூட்டறிக்கை விடுத்தனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று அனைத்து பகுதிகளிலும் உள்ள முக்கிய கோயில்களில் அதிமுக சார்பில் சிறப்பு யாக பூஜை நடைபெறுகிறது.மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில் நடைபெற்ற இந்த யாக பூஜையில் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஜக்கையன், ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்ட அதிமுகவினர் பலரும் கலந்துகொண்டனர்.

மழை பெற வேண்டி அதிமுக சார்பில் யாக பூஜை!

Intro: திமுகவிற்கு போட்டியாக வறட்சியை போக்குவதாக மழை பெற வேண்டி அதிமுக சார்பில் நடத்தப்பட்ட யாக பூஜை. உத்தரவு வெளியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தனது சொந்த மாவட்டத்தில் நடைபெற்ற பூஜையில் பங்கேற்கவில்லை.

Body: தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவில் தற்போது குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றன. சென்னை உட்பட பல பகுதிகளில் உணவு விடுதிகள், ஐ.டி.நிறுவனங்கள் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும் வரை தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளன. அரசின் அலட்சியத்தாலே குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்காத தமிழக அரசை கண்டித்து இன்று திமுக சார்பில் அணைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதற்கு போட்டியாக அதிமுக சார்பில் அணைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அமைச்சர் தலைமையில் மழை வேண்டி கோவிலில் சிறப்பு யாக பூஜை நடத்திட உத்தரவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டறிக்கை விடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று அணைத்து பகுதிகளிலும் உள்ள முக்கிய கோவில்களில் அதிமுக சார்பில் சிறப்பு யாக பூஜை நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் இன்று சிறப்பு பூஜை மற்றும் யாகம் வளர்க்கப்பட்டது. இதில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ் மற்றும் அவரது மகனான தேனி எம்.பி.ரவீந்திரநாத்குமார் என முக்கியப்புள்ளிகள் பங்கேற்கவில்லை.
மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில் இந்த பூஜையில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், ஓ.பி.எஸ்-ன் சகோதரர் ஓ ராஜா உள்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Conclusion: கோவில் மண்டபத்தில் சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக யாகம் வளர்க்கப்பட்டு, கண்ணீஸ்வரமுடையாருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.