ETV Bharat / state

நடிகர் விஜய்யை புகழ்ந்து தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு - theni district news

தேனி: நடிகர் விஜய்யை எம்ஜிஆர் போல் வர்ணித்து தேனியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

mgr
mgr
author img

By

Published : Sep 5, 2020, 2:41 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள இவர் தமிழ் திரையுலகில் வசூல் சக்கரவர்த்தியாகவும் திகழ்கிறார். விஜய்க்கு பிறந்தநாள் என்றாலே ரசிகர்கள் அதகளம் செய்வார்கள். கடந்த ஜூன் 22ஆம் தேதி அவரது பிறந்தநாளன்று மதுரை ரசிகர்கள் ஒட்டிய "வாங்கய்யா வாத்தியாரய்யா" என்ற போஸ்டர் பட்டிதொட்டியங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசியல் கருத்துகள் நிறைந்த படத்தில் விஜய் நடித்து வருவதால் அவரது படங்கள் வெளியாவதில் பெரும் சிக்கல் எழுகிறது. தலைவா படத்திலிருந்து சர்கார் படம் வரை இந்த சிக்கலை சந்தித்து வருகிறார். இருப்பினும் அவருக்கு பக்கபலமாக அவரது ரசிகர்கள் எதிர் கருத்து தெரிவித்து விஜய்க்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அந்தவகையில், விஜய் ரசிகர்கள் மதுரையில் ஆரம்பித்துள்ள விளம்பர கலாச்சாரம் தமிழ்நாடு முழுவதும் தொற்றிக்கொண்டுள்ளது.

ஊரே கரோனாவால் முடங்கி கிடக்கும் வேலையில், பொழுதுபோக்குக்கே வழியில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய்யின் கல்யாண நாளன்று, விஜயை எம்ஜிஆராகவும், அவரது மனைவி சங்கீதாவை ஜெயலலிதாவாகவும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி என்று போஸ்டர் அடித்து சிரிப்பலையை ஏற்படுத்தினர். அதிமுகவினரையும் வியக்க வைத்தனர்.

அதனோடு மட்டுமல்லாமல் பாஜகவினருக்கே டஃப் கொடுக்கும் வகையில் விவேகானந்தர் போஸ்டரை ஓட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். அதேபோன்று தற்போது விஜய்யின் புகைப்படத்தை எம்ஜிஆரை போல் வர்ணித்து தேனியில் ஓட்டப்பட்ட போஸ்டர் வெகுவாக கவர்ந்து வருகிறது. அதில், "எம்ஜிஆரின் மறு உருவமே, மாஸ்டர் வாத்தியாரே அழைக்கிறது தமிழகம் தலைமையேற்க. 2021ஆம் ஆண்டில் உங்கள் வரவை காணும் தமிழகம், வாங்க தலைவா வாத்தி" என்ற வாசகம் நிறைந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் சென்னையிலும் மக்கள் திலகத்தின் மறு உருவமே ஆட்சியமைக்க வருகை தருக, ஆயிரத்தில் ஒருவன் கெட்டப்பில் விஜயை மார்பிங் செய்து ஒட்டப்பட்டுள்ள போஸ்கர் அவ்வழியே கடந்து செல்லும் மக்கள் இதனைப் பார்த்து அசைபோட்டு செல்கின்றனர். வசீகரா படத்திலிருந்து பிகில் படம் வரை விஜய் தன்னை எம்ஜிஆரின் ரசிகனாகவே திரை வழியே வெளிப்படுத்தி வருகிறார்.

அந்தவகையில் அவரது ரசிகர்களும் அவரை வாத்தியாரே என்று போஸ்டர் ஒட்டி விளம்பரப்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க: அண்ணா, எம்ஜிஆர் தடம்பதித்த வராக நதி: சூளுரைத்த ஓபிஆர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.