மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியமும் இணைந்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் முதல் தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் தனித்து செயல்படத் தொடங்கியது. இதற்காக தேனி என்.ஆர்.டி. நகரில் தனி அலுவலகம் அமைத்து நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தைப் பொறுத்தளவில் தினமும் ஒரு லட்சத்து 20ஆயிரம் லிட்டர் பால் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் விற்பனை 5 ஆயிரத்து 400 லிட்டர் அளவிலே உள்ளது. இதற்காக 105 முகவர்கள் உள்ளனர். இந்நிலையில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று ஆவின் பாலின் சிறப்புகளை விளக்கும் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க...பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாத காலம் நீட்டிப்பு!