கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயபிரகாஷ். தந்தை இறந்த நிலையில் தாய், சகோதரனுடன் வசித்துவந்த அவர், நேற்று சூரியநல்லி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், இருசக்கர வாகனத்தில் சுற்றிவந்த விஜய பிரகாஷை காவல் துறையினர் எச்சரித்து வாகனத்தைப் பறிமுதல்செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர், சாலையின் நடுவே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
பற்றி எரியும் தீயுடன் நடந்துவந்தவரைக் கண்ட அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி அணைத்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். உடலில் 75 விழுக்காடு தீக்காயமடைந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவுக்கான வழிமுறைகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும்: அமித் ஷா!