தேனி: உத்தமபாளையம் ஹாஜி கர்த்தராவுத்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டுக்கு என்று புதிதாக ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளனர். அதன் தொடக்கவிழா நேற்று (ஆக.1) அக்கல்லூரியில் நடைபெற்றது.
இணையதளத்தில் தங்கள் கல்லூரி மட்டும் இன்றி தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுகள் மற்றும் போட்டிகள் சம்பந்தமான அனைத்து செய்திகளையும் இணையதளத்தில் காணலாம்.
தமிழக கல்லூரிகளில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் அனைத்து கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ள உதவும் இந்த இணையதளத்தில் பதிவு செய்து அதன் மூலம் மற்ற கல்லூரிகளில் நடைபெறும் போட்டிகளில் மாணவர்கள் கலந்துகொள்ளலாம். இந்த விழாவில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: B.Sc புரோகிராமிங் & டேட்டா சயின்ஸ் பாடத்தை பி.எஸ். பட்டப்படிப்பாக அறிமுகம் செய்த சென்னை ஐஐடி