ETV Bharat / state

பள்ளி மாணவிக்கு பாலியல் கொடுமை; ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது!

தேனி: பள்ளி மாணவிக்கு பிரியாணியில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் மற்றும் அவரது பெற்றோரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

cumbum pocso arrest
author img

By

Published : Jul 25, 2019, 5:52 PM IST

தேனி மாவட்டம், கம்பம் மாலையம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி நாகராஜ்(23). ஓட்டுநரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியிடம், தன்னை காதலிக்குமாறு மூன்று மாதமாக தொந்தரவு அளித்து வந்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்தால், மாணவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இன்டர்நெட்டில் பதிவேற்றி விடுவதாக மிரட்டியும் வந்துள்ளார்.

மேலும், தனது தந்தை ஏசு என்ற குமார்(48), தாயார் செல்வி(40) ஆகியோரையும் அழைத்து வந்து மாணவியை காதலிக்குமாறும் மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி சக்தி நாகராஜ், மாணவியை மிரட்டி, வீட்டிற்கு வரவழைத்துள்ளார். மாணவியை கட்டாயப்படுத்தி பிரியாணியை சாப்பிட வைத்துள்ளார். சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கிய மாணவியை, பாலியல் வன்கொடுமை செய்து அதனை போட்டோ, வீடியோ எடுத்துள்ளார்.

மயக்கம் தெளிந்த மாணவியிடம், இது குறித்து வெளியே கூறினால் ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். வீட்டுக்கு திரும்பிய மாணவி, தனது பெற்றோரிடம் நடந்ததை அழுதப்படியே கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் கம்பம் வடக்கு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சக்தி நாகராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தந்தை ஏசு என்ற குமார், தாய் செல்வி ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

பள்ளி மாணவிக்கு பாலியல் கொடுமை

Intro: தேனி மாவட்டம் கம்பத்தில் பள்ளி மாணவிக்கு பிரியாணியில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலத்காரம் செய்த டிரைவர். உடந்தையாக இருந்த அவரது தாய், தந்தையும் போக்சோ சட்டத்தில் கைது.
Body:          தேனி மாவட்டம் கம்பம் மாலையம்மாள்புரத்தைச ;சேர்ந்த 12ம் வகுப்பு பள்ளி மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த ஏசு என்ற குமாரின் மகன் சக்திநாகராஜ் (வயது 23) டிரைவரான இவர் கடந்த மூன்று மாதங்களாக மாணவி பள்ளிக்கு செல்லும் போதும், வரும் போதும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதனை மாணவி மறுக்கவே மாணவியை போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு உனது போட்டோவை மார்பிங் செய்து இன்டர்நெட்டில் போட்டுவிடுவேன் என மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவரது தந்தை ஏசு என்ற குமார்(வயது 48),தாயார் செல்வி(40) ஆகியோர்களை அழைத்து வந்து மாணவியை காதலிக்குமாறு மிரட்டியுள்ளான்.
         இந்நிலையில் கடந்த 14ம் தேதி சக்தி நாகராஜ் மாணவியை மிரட்டி வீட்டிற்கு வரவழைத்துள்ளான். வீட்டில் சக்திநாகராஜ் மட்டும் தனியாக இருந்து கொண்டு தான் வாங்கி வந்த பிரியாணியை கட்டாயப்படுத்தி மாணவிக்கு கொடுத்துள்ளார். பிரியாணியை சாப்பிட்டததும் மாணவிக்கு மயக்கம் வர தூங்கியுள்ளார். பின்னர் மயக்கம் தெளிந்து பார்த்தபோது மாணவியை பாலியல் பலத்காரம் செய்து அதனை போட்டோ, வீடியோ எடுத்து வைத்துக்கொண்டது மாணவிக்கு தெரியவந்தது.
         மேலும் இதனை வெளியில் சொன்னால் போட்டோ,வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் வீட்டில் மாணவி சோகத்தில் இருந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இது குறித்து அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
Conclusion: புகாரின் பேரில் கம்பம் வடக்கு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சக்திநாகராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தந்தை ஏசு என்ற குமார், தாய் செல்வி ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.